நடிகர் சம்பத்ராம்- இவர் பல படங்களில் ஸ்டண்ட் ஆர்டிஸ்ட்டாக பணிபுரிந்துள்ளார். மிகவும் கஷ்டப்பட்டு சினிமாவில் நுழைந்தவர். மேலும் கிடைத்த நல்ல வேலையை கூட விட்டுவிட்டு சினிமாவின் மீதுள்ள காதலால் திரையுலகில் பயணித்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் இன்னும் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.
இவர் ஏராளமான முன்னனி நடிகர்களோடு நடித்துள்ளார். மேலும் கமல் நடிப்பில் தற்போது திரைக்கு வர காத்துக் கொண்டிருக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு அண்ணனாக நடித்துள்ளாராம். இந்த படத்திற்காக ஏற்கெனவே கமிட் ஆகியிருந்த நான்கு படங்களை உதறி தள்ளிவிட்டு கமலுக்காக ஓடி வந்துள்ளாராம்.
இதையும் படிங்கள் : பாக்க பாக்க என்னமோ பண்ணுது!..அரைகுறை உடையில் அங்கங்களை காட்டும் நடிகை….
காரணம் அறிய அவரை பேட்டி எடுக்கையில் “ பம்மல் கே சம்பந்தம்” படத்தில் கமலோடு கூடவே இருக்கக் கூடிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தாராம். ஆனால் அதே சமயத்தில் இன்னொரு படத்திலும் கமிட் ஆக அந்த படக் குழு முதலில் இதில் நடித்துக் கொடுத்துவிட்டு பின் அந்த படப்பிடிப்பிற்கு போ , இல்லையென்றால் தயாரிப்பாளர் கமிட்டியிடம் கூறிவிடுவோம் என்று கூற பம்மல் கே சம்பந்தம் படத்தை பாதியிலயே விட்டு விட்டு வந்து விட்டாராம்.
அதிலிருந்து கமல் சாரை பார்க்கவே ஏதோ குற்றம் செய்தது போல இருந்தது. விக்ரம் படத்தில் கூட அவர் சீனில் வரும்போது எனக்கு அவரை பார்க்க சங்கூஜமாக இருந்தது. முதலில் பார்க்கும் போது கமல் சார் என்னை முறைத்தது போல இருந்தது. இருந்தாலும் அவரும் பழசை மறந்திருக்க மாட்டார் என நினைக்கிறேன். அதன் பின் பார்க்கும் போது சிரித்துக் கொண்டே தான் இருந்தார். தற்பொழுது தான் எனக்கும் நிம்மதியாக இருக்கிறது எனக் கூறினார் சம்பத் ராம்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…