Categories: Cinema News latest news

சமுத்திரகனியை வேண்டாம் என உதறிதள்ளிய இயக்குனர்…! வயித்தெறிச்சலில் சொன்ன கரு.பழனியப்பன்…!

தமிழ் சினிமாவில் இன்று முக்கியமாக கருதப்படுவது ஒன்று கேமரா மற்றொன்று நடிகர் சமுத்திரகனி. அந்த அளவுக்கு சமுத்திரக்கனி ஒரு தேடப்படும் நடிகராக வளர்ந்து விட்டார். இவர் இல்லாத சினிமா படங்களே இப்பொழுது பார்க்க முடிவதில்லை.

தமிழ் மட்டுமில்லாமல் பிறமொழி படங்களிலும் கலக்கி வருகிறார்.அண்மையில் பெரிய பட்ஜெட் படமான ஆர் ஆர் ஆர் படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் வரவேற்ப்பைப் பெற்றிருப்பார். இந்த நிலையில் நடிகர் பார்த்திபனின் புதுவரவான இரவின் நிழல் படத்தில் சமுத்திரக்கனிக்கு நடிக்க வாய்ப்பு வந்தது.

ஆனால் பார்த்திபனே சமுத்திரக்கனியை வேண்டாம் என சொல்லிவிட்டாராம்.காரணம் இந்த படத்தில் மிகவும் எளியவர்கள் சாதாரணவர்கள் வருஷம் முழுவதும் நடிக்ககூடும், அதனால் சமுத்திரக்கனி இதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்டார் என சொன்னதாக இயக்குனர் கரு.பழனியப்பன் கூறினார்.ஏனெனில் சமுத்திரக்கனி நிறைய படங்களை கையில் வைத்துக் கொண்டு வலம் வருகிறார்.

அவரின் பிஸியான நேரத்தில் இந்த படத்தில் நடிக்க முடியாதாம் என சமுத்திரக்கனியை கலாய்த்துப் பேசினார் கரு.பழனியப்பன்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini