இந்த நாளுக்காக காத்திருந்தேன் - விஜய்க்காக திருப்பதியில் சமுத்திரக்கனி!
நடிகர் சமுத்திரக்கனி:
தமிழ் சினிமாவில் குணச்சித்திர வேடம் மற்றும் சிறப்பு தோற்றங்களை ஏற்று நடித்து பிரபலமான நடிகராக மக்கள் இருந்து வருபவர் சமுத்திரக்கனி. இவர் பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தொடர்ந்து முன்னணி குணச்சித்திர நடிகராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த சமுத்திரக்கனி விஜய்க்கு ஆதரவாக பேசியிருக்கும் விஷயம் தான் தற்போது அனைத்து தாவெகா தொண்டர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
விஜய்க்காக வேண்டுதல்:
சமுத்திரக்கனி கூறியதாவது… 'நான் இந்த நாளுக்காக தான் நான் காத்திருந்தேன். பல தடைகளை தாண்டி தற்போது, ஆட்சி அமைக்க இருக்கும் என் அன்பு சகோதரர் தளபதி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் தளபதி விஜய் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் …
இந்த தடைகள் எல்லாம் ஒன்றுமே இல்லை. இதைக்காட்டிலும் பல தடைகள் , சிக்கல்கள் உங்களை தேடி வரும். அது எல்லாவற்றையும் உடைத்தெறிந்து அற்புதமான ஆட்சியை கொடுத்து இந்த தமிழகத்தை நல்ல நிலைக்கு கொண்டுச்செல்லவேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன் என கூறினார்.
