சூர்யா விஷயத்துல பாலா செஞ்ச தவறு.. உண்மையை சொன்ன சமுத்திரக்கனி

by Rohini |   ( Updated:2025-01-15 01:31:03  )
samuthirakani
X

வணங்கான் பாலா: தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் பாலா. அவருடைய இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் வணங்கான். அருண் விஜய் நடிப்பில் இந்த படம் வெகுவாக கவர்ந்துள்ளது. கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பாலாவின் இயக்கத்தில் வெளிவந்த படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

சிறந்த படைப்பாளி: அதைப்போல இதுவரை பெரிய அளவில் சோசியல் மீடியாவில் பாலாவின் படங்கள் பேசப்படாத நிலையில் வணங்கான் திரைப்படம் பெரிய அளவில் ட்ரெண்டாகி வந்தன. பாலாவின் படங்களை பொறுத்தவரைக்கும் ஒரு வாழ்வியல் கதைகளை மையப்படுத்தி எதார்த்தமாக அதை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதில் ஒரு சிறந்த படைப்பாளியாக கருதப்படுகிறார்.

சூர்யா விலகல்: அதைப் போல வணங்கான் திரைப்படம் காது கேளாத வாய் பேசாத ஒருவர் எந்த அளவுக்கு வலிகளை கடந்து வருகிறார் என்பதை விளக்கும் திரைப்படமாக அமைந்திருக்கிறது .இதில் கோட்டி என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய் நடித்திருக்கிறார். வணங்கான் திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இந்த படத்தில் முதலில் சூர்யா நடிப்பதாக இருந்தது. இதுபோல அவருடைய 2டி நிறுவனம் தான் படத்தை தயாரிப்பதாக இருந்தது.

என்ன பிரச்சினை வந்தாலும் பாலாதான்: ஆனால் ஏதோ ஒரு காரணத்தால் சூர்யா இந்த படத்தில் இருந்து விலக அவருடைய தயாரிப்பு நிறுவனமும் படத்தை தயாரிப்பதில் இருந்து விலகிக் கொண்டது .இருவருக்கும் என்ன பிரச்சினை என்பதை பற்றி இதுவரை யாரும் சரியான பதிலை சொல்லவில்லை. சமுத்திரக்கனி இதைப் பற்றி ஒரு சில உண்மைகளை கூறியிருக்கிறார் .சமுத்திரக்கனியும் பாலாவும் நெருங்கிய நண்பர்கள் .

தனக்கு என்ன மன கஷ்டம் வந்தாலும் அதை பாலா சரியாக புரிந்து கொள்வார். அதைப்போல நான் சோகமாக இருக்கும்பொழுது அவருடைய அலுவலகத்திற்கு செல்வதுதான் வழக்கம். அப்படி ஒரு சமயம் சூர்யா இந்த படத்தில் இருந்து விலகி விட்டார் என தெரிந்ததும் அவருடைய அலுவலகத்திற்கு சென்ற போது பாலா கணத்தை இதயத்துடன் நான்தான் தவறு செய்து விட்டேன்.

சும்மா சும்மா தேதி கேட்டால் அவர்களால் கொடுக்க முடியுமா? அதனால் தான் அண்ணன் தம்பிகளாக இருந்து விடுவோம் என விலகி விட்டோம் என பாலா கூறியதாக சமுத்திரக்கனி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். இதிலிருந்து அடிக்கடி அவரிடம் கால்சீட் கேட்டதனால் தான் சூர்யாவால் பாலா கேட்ட கால்ஷீட்டை தர முடியாமல் போயிருக்கலாம். அதனால் கூட இந்த படத்தில் இருந்து அவர் விலகி இருக்கலாம் என தெரிகிறது

Next Story