Connect with us

Cinema News

விஜயகாந்தை பார்த்ததும் வயதான பாட்டி செய்த நெகிழ்ச்சி செயல்… கலங்கிப்போன இயக்குனர் சமுத்திரக்கனி.!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராகவும், நல்ல மனிதராகவும், மக்கள் மத்தியில் தைரியமான ஆளாகவும் வலம் வந்தவர் கேப்டன் விஜயகாந்த்.  இவருடன் பழகிய சிலர் விஜயகாந்த் உடனான நெகிழ்ச்சியான சம்பவங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவர். அப்படித்தான் இயக்குனர் – நடிகர் சமுத்திரகனி அண்மையில் கேப்டன் விஜயகாந்த் பற்றி தனது அனுபவங்களை கூறியுள்ளார்.

சமுத்திரக்கனி இயக்கத்தில் விஜயகாந்த் நெறஞ்ச மனசு எனும் திரைப்படத்தில் நடித்தார். அந்த பட சூட்டிங் உடுமலைப்பேட்டையில் நடந்து வந்தது. அப்போது ஒரு வயதான பாட்டி கூட்டத்தை விளக்கிக் கொண்டு விஜயகாந்த் நோக்கி வந்தார்.

உடனே உதவியாளர்கள் விஜயகாந்த் சொன்னதின் பெயரில் வழிவிட்டு விஜயகாந்த் அருகில் அந்த பாட்டி வந்தார். அந்த பாட்டி, ‘ஐயா ரேஷன் கடையில் ஒழுங்காக அரிசி போட மாட்டேங்கிறான். நீ வந்து அவனை அடியா.’ என்று கூறுகிறார்.

இதையும் படியுங்களேன் – திருமணம் செய்து கொள்வதாக திவ்யபாரதி ஏமாற்றிவிட்டார்… விரிவான தகவல் இதோ…

உடனே கேப்டன், அப்படியெல்லாம் வந்து அடித்து விட முடியாது. நான் விரைவில் அரசியலுக்கு வருவேன். வந்தவுடன் எனக்கு நீ ஓட்டு போடு. ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்து விட்டால், நான் பிறகு அவனை என்னவென்று கேட்கிறேன். என்று கூறினார். பிறகு தனது உதவியாளர்களை அழைத்து அந்த பாட்டிக்கு அரிசியை கொடுத்து அனுப்பினார்.

இதனை பகிர்ந்து கொண்ட சமுத்திரகனி, மக்கள் அந்த அளவுக்கு விஜயகாந்த்தை நம்பினார்கள். அந்த அளவுக்கு அவரது  ஆளுமை சாமானிய மக்களிடையே இருந்தது. இன்று பெருமையாக பேசினார் சமுத்திரக்கனி.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top