கெட்டவார்த்தை அன்பின் வெளிப்பாடு.. மிஷ்கினுக்கு சப்போர்ட் பண்ணும் சமுத்திரக்கனி!...

by Rohini |   ( Updated:2025-01-30 08:52:12  )
samuthirakani
X

சமுத்திரக்கனி: ஒரு பட விழா மேடையில் மிஷ்கின் இளையராஜாவை ஒருமையில் பேசியது, அன்று முழுக்க அவர் கெட்டவார்த்தையில் பேசியது என மிஷ்கினை கடுமையான விமர்சித்திருந்தார்கள் பத்திரிக்கையாளர்கள். ஏன் ஒரு சில பிரபலங்களும் மிஷ்கின் அப்படி பொது மேடையில் பேசியிருக்க கூடாது என்றுதான் கூறினார்கள். ஆனால் சமீபத்திய ஒரு விழாவில் சமுத்திரக்கனி மிஷ்கினுக்கு ஆதரவாக இதில் என்ன தவறு இருக்கிறது என கேட்டிருக்கிறார். இதோ சமுத்திரக்கனியிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்ட கேள்வி.

நியாயமே இல்லை: திரு என்று கூப்பிடுகிற இன்று உலகமே வியந்து பார்க்கிற இளையராஜாவை இதே புது மேடையில் வைத்து வாய்க்கு வந்தபடி எல்லாம் மிஸ்கின் பேசினார். இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என சமுத்திரக்கனியிடம் கேட்டதற்கு ‘அதான் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாருல’ என்று சமுத்திரக்கனி கூறியதும் நிரூபர்கள் அனைவரும் ‘பேசிட்டு அதன் பிறகு மன்னிப்பு கேட்பதில் எந்த நியாயமும் இல்லை சார்’ என கூறினார்கள்.

வாடா போடா நண்பர்கள்: அதற்கும் சமுத்திரக்கனி ‘அதற்கு தான் மன்னிப்பும் கேட்டாரு. அதற்கான விளக்கமும் சொல்லிட்டாரு மிஸ்கின். ஒரு மாதிரியான எமோஷனலில் அப்படி பேசிட்டார். என்னிடமே கெட்ட வார்த்தை போட்டு தான் பேசுவார். முதலில் கெட்ட வார்த்தை போட்டு கூப்பிடுவார். அதன் பிறகு வாடா போடா என அழைப்பார். அதன் பிறகு தான் என் பெயரையே சொல்லி என்னை கட்டி அணைப்பார். அவன் வேற ஒரு எக்ஸ்ட்ரீம். அன்பின் உச்சத்தில் ஒரு சில விஷயத்தை சொல்கிறான்.

கான்காலில் பேசிய வெற்றிமாறன்: அதை மாதிரி தான் அன்று அவன் பேசியதும். இப்படித்தான் நான் அவனை பார்த்தேன். மிஸ்கினை நான் எந்த இடத்திலையும் தவறாக பார்க்கலை. இதெல்லாம் முடிந்து இரவு வெற்றிமாறனை நான் சந்திக்கப் போனேன். அப்போது வெற்றிமாறன் போனில் இதைப்பற்றி தான் மிஸ்கினிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்படியே அமீருக்கும் கான்கால் போட்டு அனைவரும் இதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ஒரு மனிதன் தன்னுடைய அன்பின் வெளிப்பாட்டை அதாவது அதன் உச்சத்தை எப்படி வேண்டுமென்றாலும் வெளிப்படுத்தலாம். நம்மூர் பக்கம் போனாலும் கெட்ட வார்த்தை போட்டு தான் பேச்சையே தொடங்குவார்கள். அதெல்லாம் அன்பான சொல். அதை எல்லா இடத்திலும் சொல்ல முடியாது .ஆனால் நாங்க நால்வரும் பேசும் பொழுது சொல்லிக் கொள்வோம் .மிஸ்கினிடம் அன்பு கொஞ்சம் அதிகமாக இருக்கிறது என்று நினைத்துக் கொள்வோம்.

அதனால் தான் நாலு பேருக்குள் பேசுவதை பொது மேடையில் பேசியிருக்கிறான் .ஏன் அந்த வார்த்தை நம் யாருக்குமே தெரியாதா? நாம் பயன்படுத்த மாட்டோமா? மிஸ்கின் கொஞ்சம் எக்ஸ்ட்ரீமா போய் பேசிட்டான். அதனால் நான் இதை தவறு என்று நான் சொல்லவே மாட்டேன் .வேண்டுமென்றால் அவன் சார்பாக நானும் உங்கள் காலை தொட்டு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இதே பத்திரிகையாளர்கள் தான் அன்று மிஸ்கின் பேசும் போதும் கைதட்டி சிரித்தீர்கள். அப்பொழுது ஏன் கேட்கவில்லை’ என்று சமுத்திரக்கனி பேசி இருந்தார்.

Next Story