கோலிவுட்டின் மிகவும் பிரபலமான நட்சத்திர நடிகரான தனுஷ் தொடர்ந்து தனது எல்லைகளைத் தாண்டி பாலிவுட்டில் வெற்றியை ருசித்து வருகிறார். இதற்கிடையில், திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். மாறன் என்கிற படமும் முடியும் நிலையில் உள்ளது.
தனுஷ் தற்போது இயக்குனர் வெங்கி அட்லூரியுடன் இணைந்து ‘வாத்தி’ படத்திற்காக நடிக்கவுள்ளார், கடந்த வாரம் பூஜையுடன் படம் துவங்கியது. அதன் பிறகு ‘வாத்தி’ படப்பிடிப்பில் இருந்து பள்ளி மாணவனாக முற்றிலும் மாறிய நிலையில் தனுஷின் புகைப்படங்கள் வைரலானது. இதற்கிடையில் கதாநாயகியாக நடிக்கும் சம்யுக்தா மேனன் இந்த படத்தில் இருந்து வெளியேறிவிட்டதாக ஒரு வதந்தி பரவியது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
ஆனால், இது வெறும் வதந்தி என்றும், வெங்க் அட்லூரி இயக்கி, சித்தாரா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் ‘வாத்தி’ படத்தில் சம்யுக்தா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்பதாக கூறுகின்றனர். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாம்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…