×

நாயகியாகும் யம்மி மம்மி சம்யுக்தா... இந்த முறையும் முன்னணி ஹீரோ தான் தெரியுமா?

பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்ட மாடல் சம்யுக்தாவிற்கு புது பட வாய்ப்பு கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 
 

பிக்பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்ட மாடல் சம்யுக்தாவிற்கு புது பட வாய்ப்பு கிடைத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டவர் மாடலழகி சம்யுக்தா. அழகிலும் விளையாட்டிலும் கைதேர்ந்தவராக இருந்தவருக்கு ரசிகர்கள் கூடிக் கொண்டே சென்றனர். ஆனால், நிகழ்ச்சியில் சக போட்டியாளரான ஆரி அர்ஜீனன் உடன் பெறும் பகை சம்பாரித்தார். அந்த வகையில், அவரின் வளர்ப்பை பற்றி பேச அது இணையத்தில் காட்டுத்தீயாக பரவியது. 

இதை தொடர்ந்து, நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இருந்தும் அவருக்கு இயக்குனர்கள் கதை சொல்ல தொடங்கினார். அதில், விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாக இருக்கும் துக்ளக் தர்பார் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியது. இதை தொடர்ந்து, இரண்டாவதாக ஒரு படத்திலும் நாயகியாகி இருக்கிறார். 

இப்படத்தை இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். ஆக்‌ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் நாயகனாக கௌதம் கார்த்திக் நடிக்கிறார். 2ஆவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதல் நாயகியாக நடிக்கிறார் நடிகை ஸ்ரீதிவ்யா. இவர்களுடன் இணைந்து எம்.எஸ்.பாஸ்கர், பால சரவணன், ஆகியோரும் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News