×

மூக்குல குத்து வாங்கணுமா? Zomato விளம்பரத்தில் நடித்து வாங்கி கட்டிய பிக்பாஸ் சம்யுக்தா!
 

கிண்டலுக்குள்ளாகும் சம்யுக்தா சண்முகம் வெளியிட்ட விளம்பர வீடியோ! 
 
 
மூக்குல குத்து வாங்கணுமா? Zomato விளம்பரத்தில் நடித்து வாங்கி கட்டிய பிக்பாஸ் சம்யுக்தா!

ஏற்கனவே மாடலாக இருந்தாலும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் சம்யுக்தா. ஆனால், ஆரியிடம் அவர் நடந்து கொண்டவிதம் பலருக்கும் பிடிக்கவில்லை. மேலும், சில தவறான வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தி கமலிடமும் திட்டும் வாங்கினார். 

அதன்பின் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார்.  கார்த்திக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரயன் என்கிற ஒரு மகனும் உள்ளார். மம்மியாகியும் கவர்ச்சியில் குறைவைக்காமல் புது வரவுகளுக்கு டஃப் கொடுத்து வரும் அவர் தற்போது ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்யும் Zomato விளம்பரத்தில் நடித்துள்ளார். 

நேற்றுதான் Zomato டெலிவரி நபரிடம் உணவு ஆர்டர் செய்த பெண் ஒருவர் தாமதமாக வந்ததால் தகாத வார்த்தைகளால் திட்டியதால் கோபமாகி மூக்கில் தாக்கி தாக்கியுள்ளார். அந்த பெண் ரத்தம் வடிய வடிய  வீடியோ வெளியிட்டு வைரலான நேரத்தில் பிக்பாஸ் சம்யுக்தா அதே Zomato  கம்பெனிக்கு விளம்பரம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளது பெரும் விமர்சனத்திற்கும், கிண்டலுக்கும் உள்ளாகியுள்ளது. 


 

From around the web

Trending Videos

Tamilnadu News