×

எவனும் தேவையில்லை.. அப்பா அம்மா போதும்! யாரை சொல்றாங்க புரியுதா?

நேற்று பிக்பாஸில் தாங்கள் கடந்து வந்த பாதை குறித்து போட்டியாளர்கள் பேச வேண்டும் என உணர்ச்சிகரமான டாஸ்க் ஒன்றை பிக்பாஸ் கொடுத்தார். 
 

இதைப்பார்த்து போட்டியாளர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் குமுறி,குமுறி அழுதனர். வேல்முருகன், சனம் ஷெட்டி, அறந்தாங்கி நிஷா ஆகிய மூவரும் தாங்கள் வாழ்க்கையில் சந்தித்த துயரங்களை கூறினர்.

அறந்தாங்கி நிஷாவின் கதை ரசிகர்களின் இதயங்களை வெல்ல, வேல்முருகனின் கதை உருக்கத்தை ஏற்படுத்தியது. அதிகம் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட சனம் ஷெட்டி ஷார்ட் அண்ட் ஸ்வீட்டாக தன்னுடைய கஷ்டத்தை கூறினார். தான் அடிபட்டபோது பட்ட வேதனைகளை கூறி அம்மா-அப்பா போதும் வேற யாரும் வேணாம் என முடித்தார்.

முதல்நாள் பிக்பாஸ் கொடுத்த ஹார்ட் டாஸ்க்கில் சனம் நடிப்பதாக ஜித்தன் ரமேஷ், கேப்ரியலா உள்ளிட்ட சக போட்டியாளர்கள் கூறிய நிலையில் அவரின் இந்த அழுத்தமான பேச்சு அவருக்கு ரசிகர்களை உருவாக்கி இருக்கிறது. இதேபோல அவர் அவராக இருந்தால் போட்டியில் நீண்ட நாள் தாக்குப்பிடிக்க வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் அவருக்கு தம்ஸ் அப் தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News