காதலருடன் டேட்டிங் சென்ற சனம்... இவர் தான் என்னவர்... ஆர்மி ஹாப்பி அண்ணாச்சி...

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கும் ஏகப்பட்ட ரசிகர்களுக்கு பரிச்சயமான பெயர் சனம் ஷெட்டி. அது இந்த சீசனுக்கு மட்டுமல்ல கடந்த சீசனில் கூட சனமை பலருக்கு தெரியும். காரணம் அதில் கலந்து கொண்ட தர்ஷன், சனமின் காதலர். இருவருக்கு இருக்கும் காதலே கன்டெண்ட்டாக கூட நிகழ்ச்சியில் பயன்பட்டது. அதும் சனமிற்காக வனிதா வரை வரிந்துக் கட்டிக்கொண்டு சண்டை போட்டார். ஆனால் நிகழ்ச்சி முடிந்து வெளியேறிய தர்ஷன் சனமை ஒதுக்க தொடங்கி இருக்கிறார்.
அதில் கடுப்பான சனம், காவல்துறையில் புகார் கொடுக்க பிரச்சனை வெடித்தது. அப்போது தான் சனமிற்கும், தர்ஷனிற்கும் காதலை விட நிச்சயதார்த்தமே முடிந்து விட்டது என்ற உண்மை வெளிவந்தது. தொடர்ந்து, அவர் கடந்த சீசன் பிக்பாஸில் கலந்துக் கொண்டார். கொஞ்சம் நஞ்சம் கன்டெண்ட்டை அள்ளிக் கொடுத்தவர். தடாலடியாக ஒரு வாரம் வெளியேற்றப்பட்டார். பலரும் இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், சனம் தனது காதலருடன் சென்ற காதலர் தின சந்திப்பை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அதில் சனமின் கையை பற்றி இருக்கும் காதலரின் கை மட்டுமே தெரியும்படியான புகைப்படத்திற்கு, என் உலகத்தில் ஒளியேற்றியது நீதான். இந்த காதலர் தின டின்னருக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார். அம்மணி இவர பிக்பாஸ் உள்ள அனுப்பிடாதீங்க.
You light up my world Mone❤️
— Sanam Shetty (@SamSanamShetty1) February 15, 2021
Thanks for the magical Valentine's dinner.#loveandlight #myrock pic.twitter.com/MincjXwWT7