×

திருமணம் எப்போது... ரசிகரின் கேள்விக்கு வெளிப்படையாக பதில் சொல்லிய சனம் 

ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை சென்று கடைசி நேரத்தில் நின்று விட்டது. நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைக்கிறான்.

 
1257308e-bb32-4f35-bd1c-eff5fe8155a5

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று, ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை சனம் ஷெட்டி. இவர் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை சனம் ஷெட்டி சமீபத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடி வந்தார்.

அப்போது சனம் ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர் திருமணம் குறித்து கேள்வி எழுப்பினார்.

அதற்கு நடிகை சனம் ஷெட்டி " ஏற்கனவே ஒருவரை காதலித்தேன். அது திருமணம்வரை சென்று கடைசி நேரத்தில் நின்று விட்டது. நாம் ஒன்று நினைத்தால் இறைவன் ஒன்று நினைக்கிறான்.

மேலும் எனது திருமணத்திற்கான காலம் நேரம் இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் " என்று சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News