ICU-ல் சனம் ஷெட்டி... என்ன ஆச்சு பதறிப்போன ரசிகர்கள்!

 
sanam shetty

மாடல் அழகியாக இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானவர் தான் நடிகை சனம் செட்டி. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்திருக்கிறார் .

சனம் செட்டி நல்ல அழகான தோற்றமும் பால் நிறம் கொண்ட மேனியும் கொண்டிருக்கிறார். மாடல் அழகி என்பதையும் தாண்டி சமூக சிந்தனையுள்ள பெண். சமூகத்தில் நடக்கும் பல பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுப்பவர் . நாட்டில் நடக்கும் தவறுகளை தைரியமாக நின்று பேசுபவர் சனம் செட்டி.

sanam shetty

இந்த நிலையில் தனது சமூக வலைதளத்தில் தான் மருத்துவமனையில் ஐசியூ வார்டில் இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அவருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். இதை அறிந்த ரசிகர்கள் சனம் ஷெட்டி விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்தித்து வருகிறார்கள்.

Tags

From Around the web