Categories: Cinema News latest news

Coolie: ஏற்கனவே டஜன் கணக்குல இருக்காங்க.. இன்னும் ரெண்டு பேரா? ‘கூலி’ படத்தில் இணைந்த நடிகர்கள்

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் திரைப்படம் கூலி. இந்தப் படம் ஒரு ஹேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். இந்திய சினிமாவிலேயே ஒரு ஐகானிக் ஸ்டாராக அறியப்படும் நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக இந்த சினிமாவில் சிம்மாசனம் போட்டு தனி ராஜ்ஜியமே நடத்தி வருகிறார்.

ரஜினி காந்த் என்று சொன்னாலே உலகமே அறியும் பெயராக மாறியிருக்கிறது என்றால் ஆரம்பத்தில் இருந்து அவர் போட்ட உழைப்புதான் காரணம். அவரின் நடிப்பில் கடைசியாக வெளியான வேட்டையன் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல ஒரு ரெஸ்பான்ஸை பெற்றது. அதற்கு முன் வெளியான ஜெயிலர் திரைப்படமும் வசூலில் சாதனை பெற்றது.

இதையும் படிங்க: Vidamuyarchi: எத்தன தடை வந்தாலும் சமாளிப்போம்.. விடாமுயற்சிக்காக களத்தில் இறங்கிய அஜித்

இப்படி அடுத்தடுத்து பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக ஜொலித்து வரும் ரஜினியின் நடிப்பில் அடுத்ததாக கூலி திரைப்படமும் தயாராகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கண்டிப்பாக ஒரு மாஸ் படமாக ஆக்‌ஷன் படமாகத்தான் உருவாகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஏற்கனவே கூலி திரைப்படத்தில் மல்டி ஸ்டார்கள் இருக்கிறார்கள் .

varun

அதாவது நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாகிர், உபேந்திரா என பல மொழிகளில் இருந்து நடிகர்கள் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். இதில் புதுவரவாக இன்னும் இரண்டு நடிகர்கள் சேர்ந்திருப்பதாக தெரிகிறது. சமீபத்தில் லோகேஷ் கனகராஜுடன் சந்தீப் கிஷன் மற்றும் வருண் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வைரலானது.

இதையும் படிங்க: Biggboss Tamil: சரவணனை வெளியில் அனுப்பியது போல அருணை தள்ளுங்க… பொங்கும் பிரபலம்!..

அதிலிருந்தே சந்தீப் கிஷன் மற்றும் வருண் ஆகியோரும் கூலி படத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே ரஜினிக்கு வில்லனாக கண்டிப்பாக நடிக்க மாட்டேன் என சந்தீப் கிஷன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அப்படி இருக்கும் பட்சத்தில் கூலி படத்தில் வேறொரு கதாபாத்திரத்தில்தான் நடிப்பார் என்று தெரிகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini