விஜய் மகனுடன் சிக்மா!.. அடுத்து சந்தீப் கிஷன் இப்படியொரு படத்தில் நடிக்கிறாரா?..
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடித்துள்ள 'சிக்மா' திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அதைத் தொடர்ந்து சந்தீப் கிஷன் நடிப்பில் உருவாகி வரும் 'கரிகாலா – A Magical World' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், சந்தீப் கிஷன் நடிப்பில் கடந்த ஜூலை 2-ம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியான 'சூப்பர் சுப்பு' தெலுங்கு வெப் தொடரும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. நகைச்சுவையை மையமாகக் கொண்ட இந்த தொடரில் மிதிலா பால்கர், முரளி ஷர்மா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
'கரிகாலா – A Magical World' திரைப்படம் தெலுங்கு, தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை மஹிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னாபிமோஜு இணைந்து தயாரிக்கின்றனர். இயக்குநர் உகந்தர்முனி இப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும், இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, சாப்டர் 1 2027-ஆம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சாப்டர் 2 அதே ஆண்டு அக்டோபர் 28-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள 'கரிகாலா – A Magical World' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
