×

குழந்தையாக மாறி சேட்டை செய்யும் சாண்டி -  கலக்கல் வீடியோ!

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், ரஜினியின் காலா படத்தின் நடன இயக்குநராக அசத்தினார். மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவையான பேச்சால் இவர் தமிழகமெங்கும் பலருக்கு ஃபேவரைட் ஆனார்.

 

இந்நிலையில் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையாக மாறி ஒரு செம காமெடியான வீடியோவை பகிர்ந்துள்ளார்.  மொபைல் ஆப் மூலம் குழந்தையாக உருமாறி கவின், முகென், தர்ஷனிடம் வீட்டில் போர் அடிக்கிறது என கூறி விளையாட கூப்பிடுகிறார்.

குறுக்கே அவரது மகள் லாலா, அப்பாவின் குறும்புத்தனத்தை பார்த்து நக்கலாக சிரிக்கிறார். செம காமெடியாக இருக்கும் இந்த வீடியோவை சாண்டி இன்ஸ்டாவில் வெளியிட இதை எந்த ஆப்பில் உருவாக்கினீர்கள் என்று இணையவாசிகள் கேட்டு வருகின்றனர். இதற்குமுன்னர் இதே போன்று விக்னேஷ் - நயன்தாரா இணைந்து குழந்தையாக விளையாடிய வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News