×

லுங்கி பனியனுடன் லண்டன் ரோட்டில் குத்தாட்டம் போட்ட சாண்டி... போலிசிடம் மாட்டிய தருணம்!

நடன இயக்குநர் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செம வீடியோவை பகிர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், 

 

ரஜினியின் காலா படத்தின் நடன இயக்குநராக அசத்தினார். மேலும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு, தனது நகைச்சுவையான பேச்சால் இவர் தமிழகமெங்கும் பலருக்கு ஃபேவரைட் ஆனார். 

இந்நிலையில் சாண்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு செம வீடியோவை பகிர்ந்துள்ளார். லண்டன் சென்ற அவர், லுங்கி, பனியனுடன் ரோட்டில் செம ஜாலியாக டான்ஸ் ஆடியபடி சென்றுள்ளார். அப்போது அங்கு போலீஸ் நிற்க, அப்படியே ஜகா வாங்கி, அமைதியாக திரும்பும் ஜாலியான வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார். மேலும் ''அய்யோ போலீஸூ.. லண்டனில் ஃபன் டைம்'' என பதிவிட்டுள்ளார். சாண்டியின் இந்த பதிவு ரசிகர்களை ரொம்பவே கவர்ந்துள்ளது. 

View this post on Instagram

Ayo police-u 😂 fun time in london

A post shared by SANDY (@iamsandy_off) on

From around the web

Trending Videos

Tamilnadu News