×

வீட்டில் மனைவியுடன் பறந்து பறந்து கத்தி சண்டை போடும் சாண்டி!

கலைஞர் டிவியில் ஒளிபரப்பான ’மானாட மயிலாட’ நிகழ்ச்சி மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் காலடி எடுத்து வைத்தவர் சாண்டி. தன் நடன திறமையால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சாண்டி, வாலு, க க க போ, காலா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடனம் அமைத்துள்ளார்.

 

பின்னர், கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவருக்கு பெரிய பார்வையாளர்கள் உருவாகினர். இவர் நடனத்துக்கும் துடுக்கான பேச்சுக்கும் ரசிகர்கள் பலர். தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால் உலகெங்கும் அனைத்து துறைகளும் முடங்கி உள்ளது. இந்தியாவில் சினிமா, வணிகம், கல்வி ஆகிய துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பிரபலங்கள் இந்த சமையத்தில் தங்கள் சமூக ஊடக கணக்குகளை பயன்படுத்தி கிரியேட்டிவிட்டியில் புகுந்து விளையாடி வருகின்றனர். அந்த வரிசையில் சாண்டி தற்போது ஒரு அல்டிமேட் வீடியோவை வெளியிட்டிருக்கிறார். எம்.ஜி.ஆரின் படங்களில் வருவதுபோல் அவரும் கயிற்றில் தொங்கி தன் உறவினரோடு டம்மி வாளால் சண்டை போடும் வீடியோவை இன்ஸ்டாக்ராமில் வெளியாகி உள்ளது. ஜாலியான இந்த வீடியோ தொடர்ந்து வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Puratchi thalaivar varar 🔥 wait pannunga

A post shared by SANDY (@iamsandy_off) on

From around the web

Trending Videos

Tamilnadu News