Categories: Cinema News latest news

சாண்டிக்கும் எனக்கும் என்ன இருக்கு…? கண்டிப்பா இத பண்ண தான் போறேன்…மனைவியின் குமுறல்…

இன்று தமிழ் சினிமாவில் தேடப்படும் நடன கலைஞராக மாறி இருப்பவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டி. ஒரு சில படங்களில் நடனம் அமைத்திருந்தாலும் சமீபத்தில் ஆண்டவரையே ஆட வைத்து இன்று மக்கள் மனதில் கொண்டாடப்படும் கலைஞராக உயர்ந்து நிற்கிறார் சாண்டி.

அண்மையில் வெளியான லோகேஷ் இயக்கத்தில் உருவான விக்ரம் படத்தில் பத்தல பத்தல பாடலுக்கு கமலுக்கு டான்ஸ் சொல்லிக் கொடுத்து மிகப் பெரும் பெருமையை பெற்றார். இந்த படத்தின் இந்த பாடலின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து படவாய்ப்புகள் குவிய தொடங்கியிருக்கிறது சாண்டிக்கு.

ஆரம்பத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் டான்ஸ் மாஸ்டராக பங்கேற்று அதன் மூலம் பிரபலமானார். பின் படிப்படியாக வளர்ந்து இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்று திகழ்கிறார். இவருக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். பிக்பாஸிலும் கலந்து கொண்டு மக்களை உற்சாகப்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் இவரின் முன்னாள் மனைவியும் நடிகையுமான காஜல் பசுபதி இவர்களுக்கு விவாகரத்து நடந்து இரண்டாவதாக சாண்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனாலும் காஜல் சாண்டியின் முகத்தை டாட்டூ குத்தி சுற்றிக் கொண்டு வருகிறார். இதை கண்டிப்பாக நான் எடுத்தே தீர வேண்டும். அது எவ்ளோ பெரிய வலி தெரியுமா? இன்னும் எனக்கு இது தேவையில்லை என சொல்லி வருகிறார். விவாகரத்து ஆனாலும் சாண்டியிடமும் இரண்டாவது மனைவியிடமும் அவ்வப்போது பேசிக் கொண்டு தான் இருக்கிறேன் எனவும் கூறுகிறார் காஜல்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini