×

தம்பிக்கு உடம்பு சரியில்ல.. புலியுடன் படுத்திருக்கும் சாண்டி.. வைரல் புகைப்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவரும், நடன இயக்குனருமான சாண்டி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகியுள்ளது.
 

விஜய் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் சாண்டி. அதன்பின் திரைத்துறையில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். மேலும், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் அவர் கலந்து கொண்டார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு உயிரியல் பூங்காவிற்கு சென்ற அவர் அங்குள்ள ஒரு புலியுடன் படுத்து சிறிது நேரம் தூங்குவது போல் நடித்தார். அப்போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் ‘ தம்பிக்கு ஒடம்பு சரி இல்ல..அதான் அவன் கூடவே தூங்க சொல்லி அடம் பிடிக்கிறான்..’ என பதிவிட்டுள்ளார்.

இதைக்கண்ட நெட்டிசன்கள் ‘குருநாதா பாத்து.... பாசமா பிராண்டிர போகுது’ என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News