ஓடிப்போன ஹீரோயின்... கடைசியில - பிதாமகன் அனுவத்தை பகிர்ந்த சங்கீதா!
பிதாமகன் திரைப்படம்:
வித்தியாசமான கண்ணோட்டத்தில் படத்தை இயக்கி அதில் தொடர் வெற்றிய கொடுத்து வருபவர் இயக்குனர் பாலா. 2003 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தான் பிதாமகன். இந்த திரைப்படத்தில் விக்ரம் வெட்டியானாக நடித்திருப்பார்.
அதில் அவரது நண்பனாக சூர்யா ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி இத்தனை வருடங்கள் ஆகியும் கூட அந்த திரைப்படத்திற்கான மவுஸ் கொஞ்சம் கூட குறையவில்லை. இந்த திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை தான் நடிகை சங்கீதா.
ஓடிப்போன ஹீரோயின்:
இவரது நடிப்பு இன்றளவும் இந்த திரைப்படத்தில் நின்று பேசும் இந்த சமீபத்தில் பிதாமகன் படத்தின் அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்ட நடிகை சங்கீதா முதலில் பிதாமகன் திரைப்படத்தில் நடிக்க இருந்தது வேறொரு நடிகை.

கமிட் ஆன அந்த நடிகை இயக்குனர் பாலாவின் அழுத்தத்தால் அந்த திரைப்படத்தை விட்டு ஓடி போய்விட்டார். அதன் பிறகு நான் பாலா சாரிடம் பட வாய்ப்பு கேட்டு ஒரு முறை போன் செய்தேன். அப்போது இப்ப எங்க இருக்க? என்று கேட்டார் நான் சென்னையில் இருக்கேன் என்று சொன்னேன்
வாய்ப்பு கிடைத்தது இப்படித்தான்:
உடனே மதுரைக்கு கிளம்பி வா என்று கூப்பிட்டு படத்தில் அப்படியே நடிக்க வைத்தார். இப்படித்தான் இந்த படத்தின் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மிக சாதாரணமாக கிடைத்த இந்த வாய்ப்பை நான் மிக சரியாக பயன்படுத்திக் கொண்டேன். பாலா சாரிடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிறைய விஷயங்கள் இன்னும் இருக்கு என்ன சங்கீதா இந்த பேட்டியில் தெரிவித்தார்.
