AWARD கொடுக்க போனேன் அங்கே எல்லாம் முடிஞ்சிடுச்சு - முதல் சந்திப்பு குறித்து சங்கீதா!
பாடகி சங்கீதா:
பிரபல திரைப்பட பாடகியான சங்கீதா மாடல் அழகியாக இருந்து அதன் பிறகு பின்னணி பாடகியாக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருந்தார். குறிப்பாக 90 களின் இடைப்பகுதியில் சினிமாவில் நுழைந்த இவர் பிதாமகன், தனம் உள்ளிட்ட திரைப்படங்களில் மிகச்சிறப்பாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
இதனிடையே இவர் ஏ ஆர் ரகுமானுடன் பணிபுரிந்த போது பின்னணி பாடகியாக சினிமாவில் தடம் பதித்தார். இவர் தமிழ் சினிமாவில் இளம் பாடகரான கிரிஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் கிரிஷ் உடனான முதல் சந்திப்பு குறித்து பேசியுள்ளார் சங்கீதா.
முதல் சந்திப்பு;
நான் முதன் முதலில் யாரென்றே தெரியாத அவருக்கு அவார்ட் கொடுப்பதற்காக தான் போயிருந்தேன். அப்போது முதல் சந்திப்பிலேயே அவரை எனக்குப் பிடித்து விட்டது. மிகவும் அழகாக பார்ப்பதற்கு ஹேண்ட்ஸம்மாக இருந்தார்.
அப்போது என் அருகில் அமர்ந்திருந்த நடிகர் ஜீவாவிடம் யாருப்பா இவரு? என்று கேட்டேன். உட்ஸ்ன் ஜீவா தெரியலயே சாமி என்றார். அதன் பிறகு அன்று இரவே டின்னரில் நாங்கள் சந்தித்துக் கொண்டோம்.
முதல் நாள் டின்னரிலே அவர் மிகவும் நல்லவர் போல் நடித்து என் மனதை கவர்ந்து விட்டார் என பாடகி சங்கீதா முதல் சந்திப்பை குறித்தும் காதலை குறித்தும் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.
