Categories: Cinema News latest news

‘இந்தியன் 2 ’இசை வெளியீட்டு விழாவில் யாரும் எதிர்பாராத ஒரு சிறப்பு விருந்தினர்! யார் தெரியுமா?

Indian 2: ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் தயாராகி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற இருக்கிறது. ஜூலை 12ஆம் தேதி இந்த படத்தின் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இதன் முதல் பாகம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில் அந்த வெற்றி தொடருமா இல்லையா என்பதை இன்னும் கொஞ்ச நாளில் நாம் பார்க்க போகிறோம்.

இந்தியன் படத்தின் முதல் பாகம் அந்த காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இப்போது இருக்கும் அரசியல் சூழலுக்கு ஏற்ப அதுவும் கமலும் அரசியலில் இருப்பதால் எந்த மாதிரி ஒரு கதைக்களத்தோடு இந்த படத்தில் வருகிறார் என்பதை படம் ரிலீஸ் ஆன பிறகு பார்ப்போம். இந்தியன் 2 படத்தை பொருத்தவரைக்கும் ஐந்து வருடங்கள் புரொடக்ஷனிலேயே இருந்து அதன் பிறகு ரிலீஸுக்கு வருவதால் ஒட்டுமொத்த திரையுலகினரும் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ரஜினிக்கு மரியாதை கொடுத்த விஜயகாந்த்… அதுக்காக இப்படி எல்லாமா செஞ்சாரு கேப்டன்?

அதனால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக்கும்  வகையில் பல சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவிற்கு வருகை தருவதாக ஒரு செய்தி வைரலாகி வருகின்றது. ஏற்கனவே ஷங்கரும் ரன்வீர் சிங்கம் நெருங்கிய நண்பர்கள். ஆதலால் இந்த விழாவிற்கு ரன்வீர் சிங் வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஷங்கரின் மகள் திருமணத்திற்கு ரன்வீர் சிங் வந்து மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல கேம் சேஞ்சர் திரைப்படத்தையும் சங்கர் இயக்குவதால் அந்த படத்தில் ஹீரோவாக நடிக்கும் ராம் சரணும் இந்த விழாவிற்கு வர வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. பிரபல மலையாள நடிகர் மோகன்லாலும் இந்த விழாவிற்கு வருவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது .

இதையும் படிங்க: ‘பச்ச குழந்தையினு பாலூட்டி வளர்த்தேன்’ ரேஞ்சுக்கு ஷங்கரை தள்ளிவிட்ட சித்தார்த்! ‘இந்தியன் 2’வில் இப்படி பண்ணிட்டாரே

இதற்கிடையில் இந்த விழாவிற்கு விஜயின் மனைவி சங்கீதா ஒரு மாஸ் எண்ட்ரி கொடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.  இந்தியன் 2 படத்தை லைக்கா ப்ரோடக்ஷன் தயாரிப்பதால் விஜய் மகன் சஞ்சய் இயக்கும் படத்தையும் லைக்காவே தயாரிக்கிறது. அதன் காரணமாக கூட இந்த இசை வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா வந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini