×

ஓடிடியில் வர தயாராகும் செல்வராகவனின் சாணி காகிதம் 

வன்முறை அதிகம் இருப்பதால் படத்தை திரையரங்குகளுக்குப் பதில் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

 
23ae1933-3b22-416e-872c-5164c499884d

செல்வராகவன் முதல்முறையாக நடித்துள்ள சாணி காயிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படத்தை திரையரங்குக்குப் பதில் ஓடிடியில் வெளியிட முயற்சி நடக்கிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் சாணி காயிதம். இவர் ஏற்கனவே ராக்கி என்ற படத்தை இயக்கியுள்ளார். தரமணி வசந்த் ரவி நடித்துள்ள அப்படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. வன்முறைக் காட்சிகள் அதிகம் நிறைந்த படம் ராக்கி. அருண் மாதேஸ்வரன் தியாகராஜன் குமாரராஜாவின் முன்னாள் உதவி இயக்குனர் என்பது முக்கியமானது.

selva

ராக்கி வெளியாகாத நிலையில் சாணி காயிதம் படத்தை அருண் மாதேஸ்வரன் தொடங்கினார். செல்வராகவனும், கீர்த்தி சுரேஷும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக்கிலிருந்து இதுவும் வன்முறை அதிகம் கொண்ட படம் என்பது தெரிகிறது. இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருந்த நிலையில், படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை நிறைவுசெய்துள்ளனர்.

வன்முறை அதிகம் இருப்பதால் படத்தை திரையரங்குகளுக்குப் பதில் ஓடிடியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். அமேசான் பிரைம் வீடியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாக உள்வட்ட தகவல்கள் கூறுகின்றன.
 

selva

From around the web

Trending Videos

Tamilnadu News