Categories: Cinema News latest news

மனைவிக்காக கதறி அழுதேன்.. ஆனால் இது தான் நடந்தது… ஷாக் தகவல்கள் பகிரும் கே.ஜி.எஃப் பிரபலம்

பேன் இந்தியா படங்களுக்கு முன்னோடியாக விளங்கும் கே.ஜி.எஃப் படத்தில் நடித்திருந்த சஞ்சய் தத் தனது வாழ்வில் நடந்த ஒரு முக்கிய நிகழ்வு குறித்து மனம் திறந்து இருக்கிறார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான படம் கே.ஜி.எஃப். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. இரண்டுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாகம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

கே ஜி எஃப்

முதல் பாகத்தில் இருந்த வில்லனை விட கொடூரமான வில்லனை இரண்டாம் பாகத்தில் காட்ட வேண்டும் என படக்குழு விரும்பியது. இதனால் அந்த வேடத்தில் சஞ்சய் தத் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தனர். அவரிடம் இதுகுறித்து கேட்டப்போது, அவரும் படத்திற்கு ஓகே சொல்லி விட்டாராம். அதீரா என்னும் வேடத்தில் நிறைய டேட்டோக்களை போட்டுக்கொண்டு அவர் நின்ற தோரணையிலே மிரட்டினார். ஆனால் அத்தனை கர்ஜனைக்கும் பெரிய வேதனை இருந்ததாம்.

இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டது அவர் சிகிச்சையில் இருந்ததும் பலருக்கும் அறிந்த சேதி. இதுகுறித்து இவருக்கு தெரிவிக்கப்பட்ட போது, மனைவி மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை எண்ணி கிட்டத்தட்ட இரண்டு மூன்று மணிநேரம் கதறி அழுது இருக்கிறார். தொடர்ந்து பின் விளைவுகள் ஏற்படும் எனவும் மருத்துவர்களால் கூறப்பட்டது. ஆனால் அது தனக்கு நடக்காது என்பதில் சஞ்சய் தத் உறுதியாக இருந்தாராம்.

கே.ஜி.எஃப்

தொடர்ச்சியாக ஹீமோதெரபி மட்டும் இல்லாமல் சைக்கிள் ஓட்டுவது, பேட்மிண்டன் மைதானத்திற்குச் சென்று இரண்டு-மூன்று மணி நேரம் விளையாட்டு என தனது காலத்தினை செலவழித்தாராம். திரைப்படங்கள் நடிப்பதைத் தள்ளிவைத்துவிட்டு சிகிச்சை எடுத்து வந்ததாலே தன்னால் மீள முடிந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.

Published by
Shamily