×

மகளின் க்யூட் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சீவ் - ஆல்யா மானஸா ஜோடி

சஞ்சீவ் - ஆல்யா மானஸா ஜோடி, தங்களது குழந்தையின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.  விஜய் டிவியின் ராஜா ராணி தொடரில் நடித்தவர்கள் சஞ்சீவ் கார்த்திக் மற்றும் ஆல்யா மானஸா. 

 

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அண்மையில் ஆல்யா மானஸாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தங்களின் குழந்தைக்கு அய்லா என பெயர் சூட்டி மகிழ்ந்தனர் இருவரும். 

இந்நிலையில் சஞ்சீவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் போட்டோவை பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ''ஆல்யாவுக்கு இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் ஃபாலோயர்ஸ்கள் வந்திருக்கிறார்கள். இந்த ஸ்பெஷலான நாளில் எங்கள் குட்டி இளவரசி அய்லாவை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களும் அவளுக்கு கிடைக்கட்டும்' என பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News