காமெடியன் சந்தானம் ஹீரோவாக மாறிய பிறகு , அவருக்கு ஒரு பெரிய ஹிட் தேவைப்பட்டது. முதல் படமான வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், கண்ணா லட்டு தின்ன ஆசையா ஆகிய படங்கள் ஹிட் ஆகினும் அது காமெடி படமாகவே பார்க்கப்பட்டது.
அதன் பின்னர் வெளியான தில்லுக்கு துட்டு திரைப்படம் தான் அவருக்கு ஒரு ஹீரோ ஹிட்டாக அமைந்தது. சின்னத்திரையில் தன்னை ஹீரோவாக்கிய ராம் பாலாவை இந்த படத்தின் மூலம் பெரிய திரை இயக்குநராக்கினார். அதன் பிறகு அதன் 2ஆம் பாகமும் வெளியாகி நல்ல வெற்றியை பெற்றது.
இதையும் படியுங்களேன் – காதல் செய்த நேரங்களில் நம்ம சினேகா எப்படி இருந்துள்ளார் பாருங்களேன்.! லீக்கான சூப்பர் புகைப்படம்.!
அதன் பிறகு மூன்றாம் பாகம் தயாராவதாக அப்போதே கூறப்பட்டது. அதன் பின்னர் அந்த பேச்சு எழவில்லை. தற்போது மீண்டும் தில்லுக்கு துட்டு 3ஆம் பாகம் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால்அதில் பெரிய மாற்றம்.
அதாவது இயக்குனர் ராம் பாலா – சந்தானம் இடையே சிறிய விரிசல் ஏற்பட்டதால் , அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அதற்கு பதிலாக ராம் பாலா உதவி இயக்குனர் இப்படத்தை இயக்க உள்ளார் என கூறப்படுகிறது. ராம் பாலா வேண்டாம் ஆனால், அந்த தலைப்பு மற்றும் கதை மட்டும் வேண்டுமா என ரசிகர்கள் இணையத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.
TVK Vijay:…
தமிழக வெற்றிக்…
TVK Vijay:…
Vijay TVK:…
தனுஷ் நடித்த…