Categories: Cinema News latest news

இவனுக்கெல்லாம் எதுக்கு வாய்ப்பு கொடுக்குற!.. சிம்புவிடம் சீறிய கவுண்டமணி!..

பிரபல காமெடி நடிகர் கவுண்டமணி சிம்புவுடன் இணைந்து மன்மதன் படத்தில் நடித்திருப்பார். அந்த சமயத்தில் கவுண்டமணிக்கும் சிம்புவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. அதுவும் அந்த பிரச்சனைக்கு காரணம் சந்தானம் தான் என்று லொல்லு சபா புகழ் நடிகர் சுவாமிநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மன்மதன் படத்தில் சந்தானமும் நடித்திருப்பார்.

அந்த சமயத்தில் சந்தானம் லொல்லு சபா நிகழ்ச்சியின் மூலம் பிரபலமாகி சினிமாவில் நுழைந்திருந்தார். அந்த நிகழ்ச்சியில் வாரா வாரம் ஏதாவது ஒரு படத்தை எடுத்து கலாய்த்து வீடியோ போடுவார்கள். அந்த நிகழ்ச்சியும் செம ஹிட்டானது. அதில் நடித்தது மூலம் தான் நடிகர் சந்தானம் பிரபலமானார்.

இதையும் படிங்க- அடிபட்டும் அடங்காத அஜித்!.. மாட்டிக்கொண்டு முழிக்கும் மகிழ் திருமேனி.. நடப்பது இதுதான்!…

இந்தநிலையில் அந்த பேட்டியில் சந்தானத்தை நடிக்க வைத்ததற்காக சிம்புவை கவுண்டமணி திட்டினார் என்று நடிகர் சுவாமிநாதன் கூறியுள்ளார். மன்மதன் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், நடிகர் கவுண்டமணி சிம்புவிடம் சந்தானத்திற்கு எதுக்கு பட வாய்ப்பு கொடுத்து நடிக்க வைக்குற? நாம 6 மாசம் கஷ்டப்பட்டு ஒரு படத்த எடுத்தா, அத கிண்டல் பண்ணி அவுங்க வீடியோ போடுறாங்க. சந்தானத்திற்கு எதுக்கு சினிமா வாய்ப்பு கொடுக்குற என்று கேட்டுள்ளார்.

ஆனால் சிம்புவுக்கு சந்தானத்தை மிகவும் பிடிக்கும் என்பதாலோ அல்லது சந்தானத்தின் மீதிருந்த நம்பிக்கையாலே கவுண்டமணி கூறுவதை அவர் கேட்கவில்லை. மேலும் அந்த படத்தில் கவுண்டமணியின் சில காமெடி காட்சிகளை நீக்கிவிட்டு, சந்தானத்தின் காமெடி காட்சிகளை கட் செய்யாமல் விட்டுவிட்டார் என்றும் நடிகர் சுவாமிநாதன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளர். அதன் பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்து காமெடியில் கலக்கிய கொடி கட்டி பறந்த சந்தானம், தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். 

இதையும் படிங்க- இளைய தளபதி விஜய் ‘தளபதி’யாக மாறியதற்கு காரணம் அவர்தானாம்!.. கச்சிதமா காய் நகர்த்திய எஸ்.ஏ.சி..

Published by
prabhanjani