Categories: Cinema News latest news

அனுஷ்காவுக்கும் ஆயாவுக்கும் என்ன வித்தியாசம்.! குதர்க்கமாக பதில் கூறிய சூப்பர் ஸ்டார்.!

தமிழ் சினிமாவில் நம்பர் 1 நம்பர் 2 இந்த போட்டிகளில் சிக்காமல் எப்போதும் சூப்பர் ஒன்னாக  நிலைத்து நிற்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இப்போதும் இளம் கதாநாயகர்களுக்கு கடும் போட்டியாகவும் சவாலாகவும் இருந்து வருகிறார் என்பதே உண்மை. அவர் திரையில் எவ்வளவு கம்பீரமாக இருப்பாரோ, அதேபோல நிஜ வாழ்வில் அவ்வளவு கலகலப்பாகவும் இருப்பார்.

இதனை பலரும் சூப்பர் ஸ்டார் உடன் பணியாற்றிய அனுபவங்களை பலரும் பகிர்ந்துள்ளனர். அப்படி நடிகர் சந்தானமும் ஒரு முறை சூப்பர் ஸ்டார் உடன் பணியாற்றிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். நடிகர் சந்தானம் லிங்கா படத்தில் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்திருந்தார்.

அப்போது சந்தானத்திற்கு ஓர் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.  அதாவது அன்பிற்கும் ஆசைக்கும் என்ன வித்தியாசம் என்பது தான் அது. அதனை சூப்பர் ஸ்டாரிடம் சந்தானம் கேட்டுள்ளார். இதைக்கேட்ட சூப்பர் ஸ்டார் சற்றும் சளைக்காமல் பதில் கூறியுள்ளார்.

அனுஷ்காவுக்கும், ஆயாவுக்கும் என்ன வித்தியாசமோ அதுதான் ஆசைக்கும், அன்புக்கும் உள்ள வித்தியாசம் தான். என்று கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ந்த சந்தானம் என்ன சார் இப்படி சொல்லிட்டீங்க என்று மீண்டும் கேட்டுள்ளார்.

இதையும் படியுங்களேன் – ரஜினி சத்தியம் வாங்கிட்டு தான் உள்ளேயே விட்டார்.! செஞ்ச வேலையெல்லாம் அந்த மாதிரி.!

இது கேள்விக்கான பதில் அல்ல. கேள்வி கேட்பவர்கான பதில். நீ கேள்வி கேட்டதால் உனக்கு இவ்வாறு பதில் கிடைத்தது என்று அவரது வழக்கமான ஸ்டைலில் கூலாக பதில் கூறியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனை ஒரு மேடையில் நடிகர் சந்தானம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னிலையிலேயே பேசியிருப்பார்.

உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இயல்பிலேயே கலகலப்பானவர். அதுதான் காரணமாகவே அவரது காமெடி காட்சிகளுக்கும், மாஸ் காட்சிகள் போல திரையில் ரசிகர்கள் விசிலடித்து கொண்டாடி வருகின்றனர்.

Manikandan
Published by
Manikandan