santhanam
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சந்தானம். விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான சந்தானம் தொடர்ந்து பல காமெடி நிகழ்ச்சிகளில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார். அதன் மூலம் கிடைத்த வரவேற்பால் தான் சினிமாவிலும் நிலையாக உட்கார முடிந்தது.
சந்தானத்தை சினிமாவில் நடிக்க அழைத்து வந்த பெருமை நடிகர் சிம்புவை சேரும் .மன்மதன் படத்தில் முதன்முதலாக சந்தானத்தை ஒரு காமெடி நடிகராக நடிக்க வைத்தார் சிம்பு .அதன் பிறகு சச்சின் பொல்லாதவன் என பல படங்களில் காமெடி நடிகராக நடித்து ஒரு தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகராக மாறினார் .
இதையும் படிங்க: தயாரிப்பாளர் திருமணத்தில் நயன்!.. அட நம்ம தனுஷும் போயிருக்காரே!.. அதுவும் இவ்வளவு பக்கத்துலயா!…
அவர் ஹீரோவாக இப்போது பல படங்களில் நடித்து வருகிறார். அதற்கு முதன் முதலில் அச்சாரம் போட்ட திரைப்படம் என்றால் அரை எண் 35-ல் கடவுள் என்ற திரைப்படம் தான். அதில் ஒரு முன்னணி கதாபாத்திரத்தில் தோன்றினார். அவரை நகைச்சுவையில் மிகவும் உச்சத்தில் கொண்டு சென்ற படம் என்றால் சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற திரைப்படங்கள் தான்.
அதிலிருந்து தொடர்ந்து ஐந்து முறை விஜய் அவார்ட்ஸ் அவருக்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்காக கொடுக்கப்பட்டது .அதன் பிறகு தான் ஹீரோவாக அவர் அறிமுகமானார். அதுமட்டுமல்ல பல படங்களை தயாரிக்கவும் செய்தார் .அவர் முதன் முதலில் தயாரித்த திரைப்படம் கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படம் தான்.
இதையும் படிங்க: ஏ.ஆர் ரகுமானுக்கும், மோகினி டேக்கும் தொடர்பா?!… கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்!…
இது வணிக ரீதியாக மிகவும் வெற்றிகரமான படமாக ஓடியது. இப்படி ஹீரோவாகவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற சந்தானம் தற்போது திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்து இருக்கிறார். அது சம்பந்தமான வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது. அவர் சாமி தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும் போது ரசிகர் ஒருவர் அவர் கையில் லட்டு கொடுக்க முயன்றார்.
அப்போது சந்தானம் லட்டா? இல்ல இல்ல வேணாம். நீங்களே வச்சுக்கோங்க .நான் போய் வாங்கிக்கிறேன் என சொல்ல ஆனால் அந்த ரசிகர் மிகவும் வற்புறுத்தி அவர் கையில் கொடுத்துவிட்டு சென்றார். இந்த வீடியோ தான் இப்போது வைரலாகி வருகின்றது.
இதோ அந்த வீடியோ: https://www.instagram.com/reel/DCooRuRpKgo/?igsh=MW9nNG5sZDRzdnFyYw==
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…