×

முகம் சுழிக்கும் வசனத்தை பேசி மாட்டிக்கொண்ட சந்தானம்... வச்சு செய்யும் நெட்டிசன்கள்.....

 
santhanam

காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் சந்தானம் திடீரென சில வருடங்களுக்கு முன் ஹீரோ அவதாரம் எடுத்தார். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என உறுதியாக இருக்கிறார். ஆனால், அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்களில் ‘தில்லுக்கு திட்டு’ திரைப்படம் தவிர மற்ற திரைப்படங்கள் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனாலும், சந்தானம் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.

santhanam

இவரது நடிப்பில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான திரைப்படம் டிக்கிலோனா. இப்படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரம் ஒன்று வருகிறது. எனவே, எப்போதும் கையில் ஒரு கைத்தடி எனப்படும் Stick-ஐ வைத்திருக்கிறார். அவரை பார்த்து சந்தானம்’ ஏய் Side stand' என்கிறார். இது நெட்டிசன்கள் பலருக்கும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தானம் தனது திரைப்படங்களில் தொடர்ந்து உருவக்கேலி செய்து வருகிறார். மிகவும் கொச்சையாக பேசுகிறார் என சமூக வலைத்தளங்களில் பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

santhanam

இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள செய்தியாளர் ஆவுடைப்பன் ‘சிலருக்கு இது ஒரு படம் தானே,இதுக்கு இவ்வளவு பேசனுமா என நினைக்கலாம்! இது அப்படி சொல்லிட்டு போய்ட முடியாது! ஒரு மாற்று திறனாளி ஒரு பார்க்ல இருக்க ஊக்காந்து இருக்காரு என வச்சிப்போம், அவர் பக்கத்துல இருக்க ஒரு 11 வயசு பையன், "ஏய் Side Stand" எடுத்து தள்ளி வை என சொன்னா அந்த மாற்று திறனாளிக்கு எவ்வளவு பெரிய வலியை கொடுக்கும்? இப்போ அந்த சிறுவன் தலையில் இந்த மாதிரியான வசனம் தப்பே இல்லை என பதிய வைத்தது எது?

dikkiloona

மாற்று திறனாளிகள் உரிமைகள் பற்றி கூட படம் எடுக்க வேண்டாம்,குறைந்தபட்சம் அவர்கள் சுயமரியாதைக்கு இழுக்கு சேர்க்கும்படி வசனம் வேண்டாமே! இது தனிப்பட்ட ஒருவரின் தப்பு என பார்க்க வேண்டியதில்லை,மொத்தமாக இது போன்ற வசனங்கள் நகைச்சுவை இல்லை என உணர வேண்டிய தருணம் இது!’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News