சிவகார்த்திகேயனுடன் போட்டி போட்டு அசிங்கப்பட்ட சந்தானம்.. எதுக்கு இந்த ஈகோலாம்?

மீண்டும் காமெடியனாக களமிறங்கும் சந்தானம். இப்படி ஒரு செய்தி வந்து கொண்டிருக்க அடுத்த நாளே விஷால் படத்தில் காமெடியனாக சந்தானம் என அடுத்தடுத்த அப்டேட் வந்து கொண்டே இருந்தது. இதை பார்த்ததும் உடனே ரசிகர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. இனிமேல் சந்தானம் காமெடியனாக களமிறங்கப் போகிறார் என நினைத்து கொண்டார்கள். இதைப் பற்றி வலைப்பேச்சு அந்தணன் கூறும் பொழுது மதகஜராஜா வெற்றிக்கு சந்தானம் ஒரு காரணமாக இருக்கிறார். இன்னொரு விஷயம் சந்தானத்தை விஷாலும் சுந்தர் சியும் வெளிப்படையாகவே நீங்கள் வாங்க என கூப்பிடுகிறார்கள்.
அதனால் விஷாலின் அடுத்த படத்தில் சந்தானத்தை நடிக்க வைக்க ஏதோ ஒரு பேச்சு வார்த்தை நடந்ததாகவும் ஒரு மிகப்பெரிய சம்பளத்தை அவருக்கு நிர்ணயித்ததாகவும் சொல்லப்படுகிறது. ஒரு ஹீரோவுக்கு கொடுக்கப்படும் சம்பளத்திற்கு இணையாக சந்தனத்திற்கு கொடுக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. அதுவும் இந்த படத்தில் ஒரு காமெடியனாக இல்லாமல் ஹீரோவுக்கு இணையான ஒரு கேரக்டர் ,படம் முழுக்க ஹீரோ உடனே ட்ராவல் செய்யும் கேரக்டர், இன்னும் சொல்லப்போனால் இன்னொரு ஹீரோ மாதிரியான கேரக்டர் மாதிரி தான் சந்தானம் வரப்போகிறார் என்றும் சொல்கிறார்கள்.
அதனால் தான் சந்தானம் நடிக்கிறாரே தவிர எல்லா படத்தில் அவர் காமெடியனாக நடிப்பார் என சொல்ல முடியாது. ஆனால் சிம்பு விஷால் என அடுத்தடுத்து ஆர்யா ஜீவா என இவர்களும் கூப்பிட ஆரம்பித்து விடுவார்கள். எப்படி இருந்தாலும் சந்தானத்திற்கு என ஒரு கணக்கு இருக்கும். இந்த படத்தில் இவர்களுடன் காமெடியனாக நடிக்கலாமா வேண்டாமா என அவருக்கு என ஒரு தனிப்பட்ட விருப்பம் இருக்கும் .அதன்படி தான் அவர் இனிமேல் காமெடியனாக ஒரு சில படங்களில் நடிக்க வாய்ப்பு இருக்கிறது என அந்தணன் கூறினார். ஆனால் விஷாலும் சுந்தர் சி யும் இந்த படத்தில் வற்புறுத்தி நடிக்க கூப்பிடுகிறார்கள்.
அதனால் தான் சந்தானம் நடிக்கிறார் என்றும் அந்தணன் கூறினார். இன்னொரு பக்கம் சந்தானம் காமெடியனாக இறங்காததற்கு காரணம் சிவகார்த்திகேயன் ஹீரோவாக இவ்வளவு தூரம் வளர்ந்து விட்டார் என்ற ஒரு ஈகோ இருந்ததாக ஒரு செய்தி வெளியானது .முன்பே சந்தானம் சிவகார்த்திகேயன் நடித்தால் நடிக்க மாட்டேன் என ஒரு படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் என்ற ஒரு படமே இருக்கிறது. அப்படி இருக்கும் பொழுது இப்போ சந்தானம் இறங்கி வந்திருக்கிறார். அதற்கான காரணம் என்ன என்பதை பற்றியும் அந்தணன் கூறியிருக்கிறார்.
அந்த ஈகோ கட்டாயமாக இருக்கும். சிவகார்த்திகேயன் மாதிரி அடுத்தடுத்து ஸ்டெப் எடுத்து போய் இருந்தால் சந்தானம் இப்போ இறங்கி இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடவில்லை. ஆனால் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்த படங்கள் ஓடியது. அதனால் சிவகார்த்திகேயன் வளர்ந்து விட்டார். சந்தானம் இன்னும் அப்படியே தான் இருக்கிறார். ஏன் அமரன் திரைப்படம் மாதிரி சந்தானம் பண்ண முடியுமா ?அதற்காக நம்மை டியூன் செய்து கொள்ள வேண்டும். சந்தானம் என்றால் இப்படித்தான் என மக்கள் நினைத்திருக்கிறார்கள்.
சிவகார்த்திகேயனிடம் அப்படி கிடையாது. மெல்ல மெல்ல தன்னை மாற்றி வந்து விட்டார். ஆனால் சந்தானம் காமெடி இல்லாமல் அவரை நாம் பார்க்க முடியாது. நடுவில் கூட ஏதோ ஒரு படம் பண்ணார். காமெடியே இல்லாமல் முயற்சி செய்தார். ஆனால் அந்தப் படம் தோல்வியை அடைந்தது. அதனால் அப்படி ரிஸ்க் எடுக்கக்கூட முடியாத சூழலில் தான் சந்தானம் இருக்கிறார் .நம்மிடம் மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதை கொடுத்துவிட்டு போறதுதான் சரி.
அதை விட்டுவிட்டு நான் பண்றதை நீங்கள் ரசித்தே ஆக வேண்டும் என்று சொன்னால் அது தோல்வியில் தான் முடியும். அதுதான் சந்தானத்திற்கு தொடர்ந்து நடக்கிறது. அவர் சிவகார்த்திகேயனை பார்த்து ஒரு புறம் அவரை மாதிரி வரவேண்டும் என நினைப்பது உண்மைதான். அதனால் தான் நடுவில் பல வாய்ப்புகளை அவர் இழந்து பெரிய ரிஸ்க் எல்லாம் எடுத்தார். ஆனால் இது ஒரு கட்டம் வரைக்கும் தான். இது வேலைக்கு ஆகாது என முடிவெடுத்தால் நீங்கள் திரும்பி வந்து தான் ஆக வேண்டும் என அந்தணன் கூறி இருக்கிறார்.