×

ஓடிடியில் களம் இறங்கும் சந்தானம்.. புதிய படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு....

 
dikkiloona

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். கடந்த சில வருடங்களாகவே அவர் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.

தற்போது அவர் கார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் அவர் டிக்கிலோனா என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் கால எந்திரம் பற்றிய கதையுடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தானம், யோகிபாபு, ஹர்பஜன் சிங், மொட்டை ராஜேந்திரன், அனாகா, ஷெரின் காஞ்ச்வாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார்.

dikkiloona

இந்நிலையில், இப்படம் செப்டம்பர் 10ம் தேதி ஜீ5(Zee5) ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தியேட்டர் மூடிக்கிடப்பதால் படக்குழு இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News