×

மீண்டும் வெற்றி இயக்குனர் உடன் கூட்டணி அமைத்த சந்தானம்.... இப்படமாவது வெற்றி பெறுமா?

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் என்றால் அது நடிகர் சந்தானம் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
 
santhanam

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து வெற்றி பெற்ற நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் என்றால் அது நடிகர் சந்தானம் தான். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த லொள்ளு சபா என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகி தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆரம்ப காலத்தில் காமெடியனாக தனது சினிமா வாழ்க்கையை தொடங்கிய சந்தானம் ஒரு சமயத்தில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து வந்தார். இவர் இல்லாத படங்களே இல்லை எனும் அளவிற்கு அனைத்து படங்களிலும் சந்தானத்தை ஒப்பந்தம் செய்ய ஹீரோக்கள் மட்டுமின்றி இயக்குனர்களும் விருப்பம் தெரிவித்து வந்தனர். அந்த அளவிற்கு இவரது டைமிங் காமெடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தனர்.

Actor santhanam
santhanam-cinereporters

காமெடி நடிகராக வருடத்திற்கு டஜன் கணக்கில் படங்கள் நடித்து வந்த சந்தானம் ஒரு கட்டத்தில் தனக்கு காமெடி வேண்டாம் நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என கூறி ஹீரோ அவதாரம் எடுத்தார். ஆனால் இவர் ஹீரோவாக நடித்த படங்கள் எதுவும் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறவில்லை. இவரை காமெடி நடிகராகவே திரையில் பார்க்க ரசிகர்கள் விரும்பினர்.

தற்போது எப்படியாவது ஒரு வெற்றிப்படத்தை கொடுக்க வேண்டும் என நினைத்த சந்தானம் தனது வெற்றி இயக்குனரான ராஜேஷுடன் மீண்டும் கூட்டணி வைத்துள்ளார். இயக்குனர் ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் மற்றும் ஒரு கல் ஒரு கண்ணாடி ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று அவரை முன்னணி இயக்குனராக்கின.

santhanam
santhanam-cinereporters

அந்த படங்களின் வெற்றிக்கு எல்லாம் பக்கபலமாக இருந்தவர் சந்தானம். ராஜேஷின் எல்லா படங்களிலும் சந்தானத்தின் காமெடி நல்ல வரவேற்பை பெற்று வந்தது. ஒரு கட்டத்தில் சந்தானம் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின் ராஜேஷுடன் கூட்டணி அமைக்கவில்லை. தற்போது சமீபகாலமாக சந்தானம் மற்றும் ராஜேஷ் ஆகிய இருவரின் படங்களும் தோல்வியை சந்தித்து வருவதால் இவர்கள் இருவரும் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளனர். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கூட்டணி இணைவதால் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News