ஜெட் ஸ்பீடில் நடக்கும் சந்தானத்தின் ஸோம்பி படமான 'Love Bite' ஷூட்டிங்... எப்போது ரிலீஸ்?

 
Santhanam Love Bite

காமெடி படங்களை விரும்பும் ரசிகர்களுக்கு தொடர்ந்து விருந்து அளித்து வருபவர் நம்ம சந்தானம். இவர் 'தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, DD Returns, Devil's Double Next Level' என பேய் படங்களாக டிக் அடித்து நடித்து வந்தார்.

இப்போது பேயிலிருந்து ஸோம்பி பக்கம் ரூட்டை மாற்றியிருக்கிறார். ஸோம்பி ப்ளஸ் காமெடி மிக்ஸிங்கில் உருவாகி வரும் புதிய படம் தான் 'லவ் பைட்' (Love Bite).

இந்த படத்தை இயக்குநர் செல்வின் ராஜ் சேவியர் இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே, சதீஷை வைத்து 'கான்ஜூரிங் கண்ணப்பன்' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Love bite

'Love Bite'-ல் சந்தானத்துக்கு ஜோடியாக 'டாடா' புகழ் அபர்ணா தாஸ் நடிக்கிறார். மேலும், காமெடியில் கலக்க VTV கணேஷ், ஆனந்தராஜ், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன் நடிக்கிறார்கள்.

தற்போது, இப்படத்தின் ஷூட்டிங் 40 சதவீதம் முடிவடைந்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. படத்தை இந்த ஆண்டு (2026) இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு (2027) தொடக்கத்தில் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

From Around the web