×

மறைந்த நண்பனுக்காக சந்தானம் செய்த நெகிழ்ச்சி சம்பவம்....

 

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்தவர் மருத்துவர் சேதுராமன். அதன்பின் வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

சிறந்த தோல் மருத்துவரான இவர் பலருக்கும் தோல் தொடர்பான நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பில் அவர் மரணமடைந்தார். இவர் ஆழ்வார்பேட்டையில் ‘ஜி கிளினிக்’ என்கிற மருத்துவமனையை நடத்தி வந்தார்.

மேலும், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அவரின் மருத்துவமனை கிளையை துவங்க திட்டமிட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில்தான் அவர் மரணமடைந்தார். தற்போது அதற்கான பணிகள் முடிந்துள்ள நிலையில், அந்த மருத்துவமனையை சேதுராமனின் நண்பரும், நடிகருமான சந்தானம் திறந்து வைத்துள்ளார்.

சேதுராமன் கட் அவுட்டோடு நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு ’என் நண்பரின் முதலாமாண்டு நினைவு அஞ்சலியன்று ஈ.சி.ஆரில் அவரின் கிளையை திறந்து வைப்பதில் மகிழ்ச்சி’ என டிவிட் செய்துள்ளார்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News