Connect with us

latest news

சிரிப்பே வரல சந்தானம்.. சாவு வீட்ல டாவு கேட்குதா?.. 80ஸ் பில்டப் விமர்சனம் இதோ!..

இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் சந்தானம், ராதிகா ப்ரீத்தி, கே.எஸ். ரவிகுமார், ரெட்டின் கிங்ஸ்லி, மொட்டை ராஜேந்திரன், சுந்தர்ராஜன், ஆனந்த்ராஜ், முனீஷ்காந்த், மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியான 80ஸ் பில்டப் திரைப்படம் ரசிகர்களை சிரிக்க வைத்ததா? கடுப்பேற்றியதா? என்பது குறித்த விரிவான விமர்சனத்தை பார்க்கலாம்.

80களின் காலக்கட்டத்திற்கு நம்மை இந்த படத்தின் மூலம் இயக்குனர் கல்யாண் கூட்டிச் செல்கிறார். ரெட்ரோ லுக்கில் கமல்ஹாசன் ரசிகராக சந்தானம் வருகிறார். அவருக்கும் அவரது சகோதரி சங்கீதாவுக்கும் எப்போதும் போட்டி நிலவி வருகிறது.

இதையும் படிங்க: திரிஷா அப்பவே இத பண்ணியிருந்தா பிரச்சனையே இல்ல!.. கேப்பில் கெடா வெட்டும் பயில்வான்!..

ஒரு கட்டத்தில் மின்சாரம் தாக்கி தாத்தா சுந்தர்ராஜன் உயிரிழக்க சாவு வீட்டுக்கு வரும் ஹீரோயின் ராதிகா ப்ரீத்தியை சந்தானம் காரியம் முடிவதற்குள் கரெக்ட் செய்வாரா? மாட்டாரா? என்கிற போட்டி நடைபெறுகிறது.

அதில், ஹீரோ சந்தானம் ஜெயித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த 80ஸ் பில்டப் படத்தின் கதை.

ரெட்ரோ படத்தில் இருந்து ஃபேண்டஸி படமாக இந்த படத்தை மாற்ற நினைத்த இயக்குனர் எமதர்மன், சித்ரகுப்தன் கதையை ஒரு பக்கம் வைத்து, இன்னொரு பக்கம் மரகத நாணயம் படத்தின் கதையை சொருகியது போல பல குளறுபடிகளை திரைக்கதையில் செய்து எதையும் ரசிக்க முடியாதபடி மாற்றி சிரிக்கவும் முடியாதபடி ஒரு மொக்கை படத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க: 2 ஆயிரம் கோடி போச்சி!.. சிவகார்த்திகேயனால் நடு ஆற்றில் விடப்பட்ட கமல்.. முக்கிய டீல் புட்டுகிச்சே…

இந்த வாரம் வெள்ளிக்கிழமை துருவ நட்சத்திரம் படம் ரிலீஸ் ஆகாத கேப்பை சந்தானம் நல்லாவே பயன்படுத்தி கல்லா கட்டிருக்கலாம். ஆனால், நட்சத்திர பட்டாளத்தை வைத்துக் கொண்டு காமெடி படத்தையே சரியாக கொடுக்க முடியாமல் திணறி நம்மையும் கடுப்பேற்றுகிறார். இந்த ஆண்டு சந்தானத்துக்கு டிடி ரிட்டர்ன்ஸ் மட்டுமே கை கொடுத்திருக்கிறது. பெட்டர் லக் நெக்ஸ்ட் இயர் சந்தானம் என்று தான் சொல்ல வேண்டியுள்ளது.

80ஸ் பில்டப் – ஏமாற்றம்

ரேட்டிங் – 2/5.

author avatar
Saranya M
Continue Reading

More in latest news

To Top