×

டைம் மிஷினில் சிக்கி தவிக்கும் சந்தானம்.... ‘டிக்கிலோனா’ பட டிரெய்லர் வீடியோ...

பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோவாக மாறியவர் நடிகர் சந்தானம். கடந்த சில வருடங்களாகவே அவர் கதாநாயகனாக மட்டுமே நடித்து வருகிறார்.
 

தற்போது அவர் கார்த்திக் யோகி என்பவரின் இயக்கத்தில் அவர் டிக்கிலோனா என்கிற திரைப்படத்தில் அவர் நடித்துள்ளார். இப்படம் கால எந்திரம் பற்றிய கதையுடன் உருவாகியுள்ளது. இப்படத்தில் சந்தானம், யோகிபாபு, ஹர்பஜன் சிங், அனாகா, ஷெரின் காஞ்ச்வாலா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தில் சந்தானம் 3 வேடங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை சந்தானம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News