டிசம்பர் மாதம் வெளியாகும் சந்தானத்தின் ‘லவ் பைட்’!..

 
love bite

நடிகர் சந்தானம் மற்றும் அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள லவ் பைட் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

சந்தானம், தற்போது வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து வருகிறார். சமீபத்தில் அவரது அடுத்த படமான ‘சாண்டா 20’ படப்பிடிப்பும் நிறைவடைந்துள்ளது. அந்த படத்துக்கு அதிசய பிறவி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், மலையாள நடிகையான அபர்ணா தாஸ், தமிழில் ‘பீஸ்ட்’, ‘டாடா’ உள்ளிட்ட படங்களில் நடித்துப் பிரபலமானவர். தற்போது ‘லவ் பைட்’ மூலம் சந்தானத்துடன் இணைந்துள்ளார். 


காஞ்சூரிங் கண்ணப்பன் படத்தை இயக்கிய செல்வின் ராஜ் சேவியர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், வி.டி.வி. கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படம் ஹாரர் காமெடியாக உருவாகியுள்ளது. 

மேலும், சமீபத்தில் வெளியான லவ் பைட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதமே வெளியாக போகிறதாம். 

சூரி சூப்பர் ஹிட் கொடுத்து வரும் நிலையில், சந்தானமும் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

Tags

From Around the web