×

எனக்கு ஆடவும் தெரியும்!..மரண குத்து குத்திய சந்தோஷ் நாராயணன்... வைரல் வீடியோ

 
எனக்கு ஆடவும் தெரியும்!..மரண குத்து குத்திய சந்தோஷ் நாராயணன்... வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து தற்போது முன்னணி இசையமைப்பாளராக மாறியிருப்பவர் சந்தோஷ் நாராயணன். இவரின் இசையில் சமீபத்தில் வெளியான கர்ணன் பட பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அவர் இசையில் பல புதிய படங்கள் உருவாகி வருகிறது. இதில், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் விக்ரம் மற்றும் அவரின் மகன் துருவ் நடிக்கும் புதிய படமும் ஒன்று. இப்படம் விக்ரமின் 60வத் படமாகும். 

இப்படத்திற்காக பறை இசைக் கலைஞர்களோடு வெட்ட வெளியில் அவர் இசைக்கோர்ப்பை நடத்தினார். அப்போது உற்சாக மிகுதியில் அவர்களோடு நடனமாடினார். அவர் குத்தாட்டம் போட்ட வீடியோவை அவரே தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. 

From around the web

Trending Videos

Tamilnadu News