Categories: Cinema News latest news

இவர்தான் சந்தோஷ் நாராயணன் என தெரியாமலேயே பேசிய அஜித்! அப்புறம் நடந்ததுதான் ட்விஸ்ட்

Ajith: தன்னை யார் என்றே தெரியாமல் அஜித் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாக ஒரு பேட்டியில் பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் கூறியிருக்கிறார். கோலிவுட்டில் பல சூப்பர் ஹிட் பாடல்களை இசையமைத்த பெருமைக்கு சொந்தக்காரராக விளங்குபவர் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.

அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தனது இசைப் பயணத்தை ஆரம்பித்த சந்தோஷ் நாராயணன் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற படங்களுக்கும் இசையமைத்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தெலுங்கு படத்திலும் இவர் இசையமைத்திருக்கிறார்.

இதையும் படிங்க: பிக்பாஸ் தமிழ் சீசன் 8ல் முதல் போட்டியாளர் இவரா? செம ஸ்கெட்சா இருக்கே!…

இவர் இசையமைத்த படங்களிலேயே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமாக தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் அமைந்தது. அந்தப் படத்தின் எல்லா பாடல்களும் ஆல்பம் ஹிட்டாகவே அமைந்தன.அதிலும் ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் பிடித்தமான பாடலாகவே அமைந்தன.

இந்த நிலையில் அஜித்தை பற்றி சந்தோஷ் நாராயணன் கூறிய ஒரு தகவல் பெரும் ஆச்சரியத்தை வரவழைத்திருக்கிறது. ஒரு நாள் ஏர்போர்ட்டில் அஜித்தை சந்திக்கும் வாய்ப்பு சந்தோஷ் நாராயணனுக்கு கிடைத்ததாம். ஆனால் அஜித்துக்கு இவர் இசையில் அதுவும் கோலிவுட்டில் பிரபலமானவர் என்பது தெரியாதாம்.

எப்போதும் போல மற்றவர்களிடம் பேசுவதை போல் பேசிக் கொண்டிருந்தாராம். என்ன பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? என்றெல்லாம் கேட்டிருக்கிறார். அதற்கு சந்தோஷ் நாராயணன் இசையில் ஆர்வம் உள்ளதை சொல்லியிருக்கிறார். ஆனால் நான் அப்படிப்பட்டவன், பெரிய ஆள் என்றெல்லாம் தற்பெருமை பேசுவது பிடிக்காமல் தான் யார் என்பதை சந்தோஷ் நாராயணன் சொல்லவே இல்லையாம்.

இதையும் படிங்க: 18 மணி நேர உழைப்பு வீணாப் போச்சே? ‘குட் பேட் அக்லி’ ரிலீஸில் இப்படி ஒரு சிக்கலா?

உடனே அஜித் ‘ஓ ஒகே.ஒகே. இசையில் ஆர்வம் இருந்தால் அதை அப்படியே தொடர்ந்து கொண்டே இருங்கள், ஒரு நாள் நல்ல எதிர்காலம் அமையும்’ என எப்போதும் போல் அட்வைஸ் சொல்லிக் கொண்டிருந்தாராம். அப்போது சந்தோஷ் நாராயணின் மனைவி அருகில் வந்து சந்தோஷ் நாராயணன் யார்? எந்த படங்களுக்கெல்லாம் இசையமைத்திருக்கிறார் என்பதை முழுவதுமாக சொன்ன பிறகுதான் அஜித்துக்கு தெரியுமாம்.

உடனே அஜித் சந்தோஷ் நாராயணனை தனியாக அழைத்துக் கொண்டு சாரி கேட்டாராம். அப்போது ஒரு ரசிகர் ஒருவர் இவர்கள் பக்கம் வந்து அஜித்தின் தோளை பிடித்து செல்ஃபி எடுக்க முயன்றிருக்கிறார். அவரிடம் அஜித் ‘என்ன படித்துள்ளீர்கள், என்ன வேலை செய்கிறீர்கள்’ என்று கேட்க அதற்கு அந்த ரசிகர் அவர் படிப்பு பற்றி சொல்லியிருக்கிறார்.

இதையும் படிங்க: சோலி முடிஞ்சிது… மொத்தமாக கசிந்த கோட் திரைப்படத்தின் கதை… அப்போ அது இல்லையா?

அதற்கு அஜித் ‘இவ்ளோ படித்துள்ள நீங்கள் என்னிடம் கேட்டு புகைப்படம் எடுத்திருக்கலாமே’ என்று ஒரு மரியாதையாக கூறி அனுப்பிவைத்தாராம். இதை பற்றி சந்தோஷ் நாராயணன் கூறும் போது ‘புகைப்படம் எடுத்தவரை கண்டபடி பேசாமல் மிகவும் தன்மையாக பேசி புரியவைத்து அனுப்பினார்’ என கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini