Sara: ‘தெய்வதிருமகள்’ பாப்பாவா இது? கோலிவுட் மிஸ் பண்ணிடுச்சே.. செம ஸ்டைலிஷான லுக்கில் சாரா
விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் சாரா. அந்த படத்தில் அவருடைய எமோஷனலான ஆக்டிங் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்தப் படத்திற்காக சாராவிற்கு பல விருதுகளும் கிடைத்தன. தமிழ் மட்டுமல்ல தெலுங்கு, மலையாளம் ,ஹிந்தி என எல்லா மொழிகளிலும் சாரா நடிக்க தொடங்கினார்.
அவர் மும்பையில் பிறந்தவர். பிரபல நடிகர் ராஜ் அர்ஜுன் மற்றும் டான்ஸர் சன்யா அர்ஜுன் அவர்களின் ஒரே மகள்தான் சாரா அர்ஜுன். 18 மாத குழந்தையாக இருக்கும்போதே விளம்பரங்களில் நடிக்க துவங்கி விட்டார். கிட்டத்தட்ட நூறு விளம்பரங்களுக்கும் மேலாக இவர் நடித்திருக்கிறார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பு தான் தெய்வ திருமகள். அந்த படத்திற்கு பிறகு குழந்தை நட்சத்திரமாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
அதில் தமிழில் சைவம் திரைப்படமும் மிக முக்கியமாக அவருடைய கரியரில் பேசப்பட்டது. நடிப்பையும் தாண்டி படங்களில் சாராவின் எமோஷனல் காட்சிகள் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது. இந்த நிலையில் தற்போது ஹிந்தியில் ரன்வீர் சிங்க் ஜோடியாக சாரா நடிக்கிறார். இதன்மூலம் ஹீரோயினாக பாலிவுட்டில் இதுதான் அவர் அறிமுகமாகும் முதல் திரைப்படம். துரந்தர் என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ஒரு ஸ்பை ஆக்சன் திரில்லர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இந்த படத்தில் ரன்வீர் சிங் சாரா இவர்களுடன் இணைந்து மாதவன் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். இந்த படம் டிசம்பர் 5ஆம் தேதி வெளியாக இருக்கின்றது. இந்த படத்தின் டிரைலர் இன்று வெளியாகி இருக்கிறது. ட்ரெய்லர் வெளியீட்டு விழாவிற்கு சாரா, மாதவன், ரன்வீர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் சாரா செம ஸ்டைலிஷான லுக்கில் அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.
வெள்ளை நிற உடையில் வந்து ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் சாரா. பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக கருதப்படும் ரன்வீர் சிங்குக்கு ஆப்போசிட்டாக சாரா நடிக்கிறார் என்பதே அவருக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய அங்கீகாரம். இந்த படத்திற்கு பிறகு சாராவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் என நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அது மட்டும் அல்ல தமிழிலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
