×

வசந்த முல்லை போலே வந்த சாரங்கதரா....மகனுக்கு பார்த்த பெண்ணை அடையத் துடித்த தந்தை!

 
sart

இப்படி ஒரு மாறுபட்ட கதையம்சம் கொண்ட ஒரு சிவாஜி படம்...1950களின் இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. வித்தியாசமான கதையம்சம் கொண்ட இப்படம் தெலுங்கிலிருந்து ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் சாரங்கதாரன் இறப்பது போல் காட்சி அமைக்கப்பட்ட இந்தி ரீமேக் படுதோல்வியை அடைந்ததால், தமிழில் கிளைமாக்ஸ் காட்சியில் சாரங்கதாரன் பௌத்த துறவியின் ஆசியால் உயிரோடு மறுபடியும் நலமுடன் எழுந்து வருவது போன்று சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டு வெளியானது. 

இப்படத்தில் புகழ்பெற்ற பாடலான வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே... என்ற பாடல் இடம்பெற்றது. இந்தப்பாடலைப் பாடியவர் டி.எம்.எஸ்.சௌந்தரராஜன். இதே பாடல் தளபதி விஜய் நடித்த போக்கிரியில் ரீமிக்ஸ் சாங்காக வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கௌப்பியது குறிப்பிடத்தக்கது. 

சாரங்கதராவின் இயக்குனர் வி.எஸ்.ராகவன். இப்படத்தில் சிவாஜி, எம்.என்.நம்பியார், பானுமதி, ராஜசுலோசனா, எஸ்.வி.ரங்கராவ், ஏ.கருணாநிதி, வளையாபதி, முத்துகிருஷ்ணன், டி.பி.முத்துலட்சுமி, பி.சாந்தகுமாரி உள்பட பலர் நடித்துள்ளனர். கதை, வசனத்தை எஸ்.டி.சுந்தரம் எழுதினார். ஜி.ராமநாதன் இசையில் மருதகாசி, மாரிமுத்தா பிள்ளை ஆகியோர் பாடல்களை எழுத, டி.எம்.எஸ்., சீர்காழி கோவிந்தரராஜன், எஸ்.சி.கிருஷ்ணன், வி.டி.ராஜகோபாலன், பானுமதி, ஜெயலட்சுமி, பி.சுசீலா, ஜிக்கி, ஏ.பி.கோமளா, ஏ.ஜி.ரத்னமாலா, கே.ராணி ஆகியோர் பாடியுள்ளனர். 

இப்படத்தில் மாரிமுத்தாபிள்ளை இயற்றிய ஏதுக்கித்தனை மோடி தான் என்ற கீர்த்தனைக்கு ஆடும் குமாரி கமலாவின் நடனக்காட்சி அற்புதமாக இருக்கும். சாரங்கதரா முதலில் ஆங்காங்கே மேடைநாடகமாக அரங்கேற்றம் செய்யப்பட்டது. ஜி.ராமநாதனின் இசையில் 13 முத்தான பாடல்களைக் கொண்ட படம் இது. வசந்த முல்லை போலே வந்து, என்ன வேண்டும், எனக்கென்ன வேண்டும், கண்களால் காதல் காவியம், மதியில்லா மூர்க்கருக்கோர் மகிமை, கண்ணால் நல்லாப்பாரு, தன்னை மறந்தது என் மனம், பெரிய இடத்து விஷயம், வந்திடுவார் அவர் என் மனம் போலே, அற்புதக்காட்சி ஒன்று கண்டேன், வாழ்க நமது நாடு, எட்டி எட்டி பாக்குதடி, மேகத்திரை பிளந்து மின்னலைப் போல், ஏதுக்கித்தனை மோடி தான் ஆகிய பாடல்களை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம். 

சாராங்கதாரா என ஒரு படம். சிவாஜி, பானுமதி நடிப்பில் 1958ல் வெளியானது. நாடக்கலையின் தந்தையான சங்கரதாஸ் சாமிகள் எழுதிய நாடகம். ஆந்திராவில் வெங்கியை ஆண்ட ராஜராஜ சோழனின் கொள்ளுபேரன் ராஜராஜ நரேந்திரனின் கதை இது.

சாரங்கதரா கதை துயரம் மிகுந்தது. மன்னன் ராஜராஜ நரேந்திரன் (ராஜேந்திர சோழன் மகள் குந்தவையின் மகன்) வெங்கியை ஆன்டுவருகிறான். அவனது மகன் சாரங்கதாரன்.

சாரங்கதாரனுக்கு பெண் தர விருப்பபட்டு சித்ராங்கி எனும் இளவரசியின் ஓவியத்தை அவளது பெற்றோர் அனுப்பி வைக்கிறார்கள். ஓவியத்தை கண்ட வயதான மன்னன் நரேந்திரன் காதலில் விழுகிறான். அதன்பின் மந்திரியின் சதிதிட்டத்தின் பேரில் தன் உடைவாளை அனுப்பி அதற்கு மாலையிட சொல்கிறான். சாரங்கதாரனுக்கு கல்யானம் செய்து வைப்பதாக நினைத்து சித்ராங்கியின் பெற்றோர் அவளை அந்த உடைவாளுக்கு மாலையிட சொல்ல, அவள் அதற்கு மாலையிட்டு விடுகிறாள். அக்காலத்தில் ஒருவனுடைய உடைவாளுக்கு மாலையிடுவது அவனையே திருமணம் செய்வது போல என்பதால் சித்ராங்கி ராஜராஜ நரேந்திரனின் மனைவி ஆகிவிடுகிறாள்.

அரண்மனைக்கு வந்த சித்ராங்கியால் அழுது புலம்ப மட்டுமே முடிகிறது. அதன்பின் சாரங்கதாரனை கண்டு தான் ஏமாற்றபட்டதை சொல்லி அவன் மேல் உள்ள காதலை சொல்கிறாள். அவன் அவளை தாயாக நினைப்பதாக சொல்லி அவளை தவிர்க்கிறான்

கோபமடைந்த சித்ராங்கி சாரங்கதாரனை வழிக்கு கொண்டுவர அவன் தன்னை காதலிப்பதாக கதை கட்ட, அது மன்னன் காதுகளுக்கு போகிறது. கோபமடைந்த மன்னன் நரேந்திரன் மகனை மாறுகை, மாறுகால் வாங்க உத்தரவிடுகிறான். கொலைகளத்தில் சாரங்கதாரனுக்கு மாறுகை, மாறுகால் வாங்கப்பட, சித்ராங்கி தீப்பாய்ந்து உயிரை விடுகிறாள்

இதுதான் ஒரிஜினல் கதை.

நாடகமாக பெருவெற்றி அடைந்த இக்கதையை இந்தி, தமிழ் இரண்டிலும் 1938ல் தயாரித்தார்கள். தமிழில் சாரங்கதாரனாக நடித்தவர் அன்றைய சூப்பர் ஸ்டார் எம்.கே.டி பாகவதர். தமிழை முந்திக்கொண்டு இந்திப்படம் வெளியாகி படுதோல்வியை தழுவியது. என்ன காரணம் என பார்த்தால் சோகமான முடிவு மக்களுக்கு பிடிக்கவில்லை என தெரிந்தது. அதன்பின் எடுத்த படத்தின் கிளைமேக்ஸை மாற்றி  ஷ_ட் செய்து தமிழில் "நவீன சாரங்கதாரா" என பெயர் மாற்றம் செய்து மாறுகை, மாறுகால் வாங்கபட்ட சாரங்கதாரனை ஒரு பவுத்த துறவி மீண்டும் நலம்பெற செய்வதுபோலவும், மன்னன் மனம் திருந்தி சாரங்கதாரனுக்கும், சித்ராங்கிக்கும் கல்யானம் செய்து வைப்பது போலவும் படம் எடுக்க படம் சூப்பர் ஹிட்

இதை 1958ல் சிவாஜி, பானுமதியை வைத்து ரிமேக் செய்தார்கள். சிவாஜி தான் சாரங்கதாரன். பானுமதி சித்ராங்கி. 1958ல் கதையில் அக்கால மரபுகளுக்கு ஏற்ப ஒரு மாற்றம். சிவாஜி இறுதியில் உயிர்பிழைக்கிறார். தந்தை நரேந்திரன் (நம்பியார்) கொல்லப்படுகிறார். பானுமதி சிவாஜி மடியில் படுத்தபடி உயிர்விடுகிறார். சாரங்கதாரன் கையால் தனக்கு ஈமக்கடன் நடக்கவேண்டும் என்பது அவரது கடைசி ஆசை. சளைக்காத சிவாஜியும் தாய்க்கு மகன் செய்யவேண்டிய இறுதிகடனை நிறைவேற்றுவேன் என சொல்ல 'ச்சை..", என சலித்தபடி பானுமதி உயிர்விடுகிறார்

சாரங்கதரா என்பது காலத்துக்குக் காலம் உருமாறி கால் மாறி கை மாறி கதையில் உப்பு காரம் சேர்க்கப்பட்டு சுவையைக் கூட்டிக் கழித்து சொல்லப்படும் ஒரு நிகழ்ந்த வரலாறுதான. இதன் உண்மையான வசனக் கட்டு (படியெடுக்கப்பட்ட) ஓலைகள் ஏறத்தாழ இருநூறு ஆண்டுகளுக்கு மேலானவை ராஜமுந்திரி நூலகத்தில் உள்ளது. பாழடைந்த தெலுங்கு வார்த்தைகள். நல்ல பண்டிதர் உதவியுடன் படிக்கவேண்டும். இன்னமும் இருக்கிறது.

சுருக்கமாகச் சொல்லப்போனால், சாராங்கதரா கதை இதுதான்...

ராஜராஜநரேந்திரன் ஆண்ட 1040-60 களில் மிகவும் புகழ்பெற்ற நடனக்காரி அவள் பெயர்தான் சித்ராங்கி. அவள் நடனத்தையும் வனப்பையும் ஒருசேர ரசித்த ராஜராஜநரேந்திரன் அவளை தன்னவளாக்க முயன்றான். அவள் தன் நடனக்கார காதலனுக்காக அரசனை மறுத்து விட்டு தீயில் பாய்ந்துவிட்டாள். இந்த நாடகம் இன்றளவும் ராஜமுந்திரியில் ஆங்காங்கே திருவிழா சமயங்களில் நடந்து வருகின்றது.

ஸாரங்கம் என்றால் மான். மானைக் கையில் தரித்தவர் என்று ஸாரங்கதர ஈஸ்வரன் கோவில் ராஜமுந்திரியில் உள்ளது.

ரசிகர்களால் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டிய அந்தப் பாடலின் வரிகள்....இதோ...ரசனையுடன் வாசித்து பாருங்கள்.

வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே


இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே.. வா........
இசையினில் மயங்கியே இன்புறும் அன்பே வா
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என் மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே
மாயமெல்லாம் நானறிவேனே வா வா ஓடிவா
வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே

சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே
சிந்தனை விருந்தாகி ஜீவியக் கனவாகி
விந்தைகள் புரிந்தாய் நான் அறியாமலே
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா
மந்திரக் கண்ணாலே தந்திர வலை வீசும்
சுந்தர வடிவே உன் துணை காணவா
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே
இந்திர வில் நீயே சந்திர ஒளி நீயே
ஈடில்லா உன்னையே என்... மனம் நாடுதே
ஈடில்லா உன்னையே என்... மனம் நாடுதே

வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண் புறாவே...
 

From around the web

Trending Videos

Tamilnadu News