நடிகையின் மடியில் படுத்த ஹீரோ.. பொறாமையில் கத்திய தனுஷ்! அட இப்படி வேற இருக்கா?

மாஸ் காட்டும் தனுஷ்: தமிழ் சினிமாவில் ஒரு மாஸ் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். நடிகராக மட்டுமல்லாமல் இப்போது இயக்கத்திலும் அடுத்தடுத்த கட்ட பயணத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் ராயன் திரைப்படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கினார்.
NEEK: அந்த படத்தில் பவிஷ் ,அனிகா சுரேந்தர் ,சரண்யா பொன்வண்ணன் என முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க காதல் கதையை மையப்படுத்தி அமையும் இந்த படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார் .படத்தில் பாடல்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சமீபத்தில் தான் படத்தின் டிரைலர் வெளியாகி ட்ரெய்லரும் மக்களை நல்ல முறையில் சென்றடைந்து இருக்கிறது.
அடுத்த படம்: இதற்கு அடுத்தபடியாக இட்லி கடை திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி அதில் நடித்தும் வருகிறார். அந்த படத்தில் அருண் விஜய் வில்லனாக நடித்திருப்பதாக தகவல் உள்ளது. தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனன் அந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஆடியோ விழா: அப்போது அந்த விழாவிற்கு படத்தில் நடித்த நடிகர்கள் அவர்களுடன் அருண் விஜய், ஜிவி பிரகாஷ், ராஜ்குமார் பெரியசாமி என முக்கிய பிரபலங்கள் அந்த விழாவில் கலந்து கொண்டனர். அப்போது சரண்யா பொன்வண்ணன் பேசும் பொழுது தனுஷின் பெரும்பாலான படங்களில் அம்மாவாக நடித்திருக்கிறேன். நான் எங்கு போனாலும் என்னை தனுஷ் அம்மா என்றுதாம் அழைக்கிறார்கள்.
பொறாமையில் பேசிய தனுஷ்: அதுவும் வேலையில்லா பட்டதாரி படத்தில் எனக்கும் தனுஷுக்கும் இடையே இருந்த அந்த அம்மா மகன் பாசம் இன்று வரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது .இந்த படத்தில் கூட நான் பவிஷுக்கு அம்மாவாக தான் நடித்திருக்கிறேன் .அப்போது ஒரு காட்சியில் பவிஷ் என்னுடைய மடியில் படுத்திருப்பார். தனுஷ் அந்த காட்சியை டைரக்ட் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு பொறாமை வந்துவிட்டது.
பொறாமையில் பவிஷை ‘டேய் அது நான் படுக்க வேண்டிய இடம். இப்போ நீ படுத்து இருக்க. சரி சரி படுத்துக்கோ ’என கூறினார் தனுஷ். அந்த அளவுக்கு எனக்கும் தனுஷுக்கும் இடையே அப்படி ஒரு பந்தம் இருக்கிறது. உண்மையிலேயே தனுஷின் அம்மா நான் தான் என்ற அளவுக்கு அனைவரும் என்னை பார்த்து வருகிறார்கள் .அது எனக்கு மிகவும் சந்தோஷம் என சரண்யா பொன்வண்ணன் அந்த மேடையில் கூறினார்.