×

கோபத்தில் அனைவரின் முன்னிலையில் வேட்டியை கழட்டி வீசிய சரத்...

கோபம் உச்சிக்கு ஏறி வேட்டியை கழட்டி வீசி விட்டு சென்று விட்டாராம் சரத்குமார்.
 
sarathkumar-radhika

மிழ் சினிமாவில் 90களில் மிரட்டும் நடிகராகாவும் கதாநாயகனாவும் திகழ்ந்தவர் நடிகர் சர்த்குமார். அவர் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றியை எட்டியது. அந்தவகையில், தமிழ் சினிமாவில் விக்ரமன் மற்றும் சரத்குமார் கூட்டணியில் வெளியாகி சரித்திர சாதனை படைத்து, அதிகம் பேர் தியேட்டரில் சென்று பார்த்த படங்களில் ஒன்று சூரிய வம்சம்.

சூரியவம்சம் படம் வெளியாகி 25 வருடங்களான நிலையில் சமீபத்தில் சரத்குமாருடன் ஒரு பேட்டி நடைபெற்றது. அதில் சூரியவம்சம் சூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கலகலப்பான நிகழ்ச்சி ஒன்றை குறிப்பிட்டுள்ளார். சூரிய வம்சம் படத்தில் தந்தை கெட்டப்புக்கான மேக்கப் எல்லாம் முடித்து அறையில் காத்து கொண்டிருந்தாராம்.

அசிஸ்டன்ட் இயக்குனர் ஒருவர் ஷாட் ரெடியானதும் கூப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு போய்விட்டார். ஷாட் ரெடியானதும் சரத்திடம் சொல்லாமல் மறந்து போய் நண்பரகளுடன் பேசிகொண்டிருந்திருக்கிறார். ஆனால் விக்ரமனுக்கு உதவி இயக்குனர் செய்த விஷயம் தெரியாது. 

ராதிகாவிடம் சீன் பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது சரத்குமார் பற்றி புகார் செய்தாராம். என்ன ஹீரோ, எப்போ பார்த்தாலும் பெண் தோழியுடன் போனில் அரட்டை அடித்துக் கொண்டு இருக்கிறாரே தவிர படத்தில் கவனம் இல்லை, ஷாட் ரெடி ஆகி இவ்வளவு நேரமாகியும் ஆளை காணவில்லை என ஆச்சா போச்சா என திட்டிப் பேச ஆரம்பித்து விட்டாராம்.

எதிர்பாராத விதமாக விக்ரமன் பேசிக்கொண்டிருக்கும்போது சரத்குமார் அவரின் பின்னே நின்றதை கவனிக்கவில்லை. தப்பே செய்யாத தன்னை விக்ரமன் திட்டி விட்டதால் செம கடுப்பில் இருந்தாராம் சரத்குமார். அப்போது தன்னுடைய கோபத்தை காட்டி ஆகவேண்டும் என கேமராமேன் முதல் அசிஸ்டன்ட் டைரக்டர்கள் வரை எரிந்து விழுந்தாராம் சரத்.

ஒரு நிமிடத்தில் கோபம் உச்சிக்கு ஏறி வேட்டியை கழட்டி வீசி விட்டு சென்று விட்டாராம் சரத்குமார். ஆனால் தற்போது வரை எதற்காக வேட்டியை கழற்றி வீசினேன்? என்பதை யோசித்து கூறி நகைச்சுவையாக பேசி வருகிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News