
Cinema News
அந்த படத்தில் நான் நடிக்கவா? ஆசையாக கேட்ட சரத்குமார்… முடியவே முடியாது என மறுத்த இயக்குனர்!…
Published on
By
Sarathkumar: தமிழ் சினிமாவின் சூப்பர்ஹிட் திரைப்படம் ஒன்றில் நடிக்க ஆசைப்பட்டு அதற்கு இயக்குனர் முடியவே முடியாது என மறுத்துவிட்ட சம்பவம் நடந்ததாம். அதற்காக அவருக்கு ஒரு திரைப்படத்தினையும் செய்து அதையும் ஹிட்டடிக்க கொடுத்தாராம் இயக்குனர்.
தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் சரத்குமார். ஆனால் அங்கு அவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து தமிழில் புலன் விசாரணை படத்தில் நடித்தார். தொடக்கமே நல்ல முறையில் அமைந்தது. இதனால் தமிழில் தனக்கான ஒரு அடையாளத்தினை உருவாக்கினார்.
இதையும் படிங்க: புரட்சித்தளபதி தளபதி ஆக வேண்டாமா? ஆசையை தூண்டி விஷாலின் அரசியலுக்கு முட்டுக்கட்டை போட்ட பிரபலம்
ஆனால் அவர் ஹீரோவாக நடித்த திரைப்படங்களை விட வில்லன் வேடத்தில் மாஸ் காட்டினார். இதை தொடர்ந்து 2000களில் இருந்து கேரக்டர் வேடத்தில் நடித்து வந்தார். அப்படங்களும் சூப்பர்ஹிட்டானது. ஆனால் சரத்குமாரின் கேரியரில் ஹிட் படம் என்றால் அது சூர்யவம்சம். ஆனால் இப்படத்தினை விக்ரமன் இயக்கியதே சரத்குமாரை சமாதானம் செய்வதற்கு தானாம்.
முதலில் வானத்தை போல கதையை விக்ரமன் எழுதி விட்டார். அந்த கதையை கேட்டதும் சரத்குமார் நானே இந்த படத்தில் நடிக்கிறேன் எனக் கூறினாராம். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரிக்கும் அதுவே சரியென தோன்றியது. ஆனால் விக்ரமன் தற்போது நாட்டாமை திரைப்படத்தில் சரத்குமார் இரட்டை வேடத்தில் நடித்துவிட்டார்.
இதையும் படிங்க: இமான் வருவதற்குள் போய்விட்டார் அமரன்!.. எஸ்.கே.வை கலாய்த்த பிரபலம்!.. இது செம நக்கல்யா!..
அவர் இந்த படத்தில் நடிப்பது அவ்வளவு சரியாக இருக்காது. அதனால் இந்த படத்தில் விஜயகாந்த் நடிக்க வேண்டும் எனக் கூறினாராம். பின்னர் தான் சூர்யவம்சம் கதை உருவானது. அதில் முதலில் அப்பா கேரக்டருக்கு விஜயகுமாரை கேட்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி தான். இரட்டை வேடத்திலும் சரத்குமாரே நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாராம். இதை தொடர்ந்து வெளியான அப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்தது குறிப்பிடத்தக்கது.
Bison: நடிகர் விக்ரமின் மகனும் நடிகருமான துருவ் விக்ரம் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் திரைப்படம் பைசன். இந்த படம் அக்டோபர்...
Simbu-Dhanush: தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் வரிசையில் அடுத்த இரட்டை போட்டியாளர்களாக பார்க்கப்பட்டவர்கள் சிம்புவும் தனுஷும். சிம்பு குழந்தை...
SMS: கடந்த 2009 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் வெளியான திரைப்படம்தான் சிவா மனசுல சக்தி. இந்தப் படத்தில் ஜீவா நாயகனாக...
கோமாளி படம் மூலம் இயக்குனராக களமிறங்கி முதல் படத்திலேயே ஹிட் கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சியில்...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி. அந்த படத்திற்கு முன் அஜித் நடிப்பில்...