Connect with us
mgr

Cinema News

உங்கள விட அவருதான் முக்கியம்.. எம்ஜிஆரிடமே தில்லா சொன்ன ஏவிஎம் சரவணன்!. யாரா இருக்கும்?..

தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் பெயரை கேட்டாலே கையெடுத்துக் கும்பிடும் அளவுக்கு பெரிய மரியாதையையே ஏற்படுத்திய மனிதர். இன்றளவும் தங்கள் கடவுளாகவே எம்ஜிஆர் புகைப்படங்களை வைத்து பூஜை செய்தும் வருகின்றனர். அவர் ஆற்றிய பணிகள் தொண்டுகள் ஏராளம்.

mgr1

mgr1

அதன் காரணமாகவே அரசியலிலும் ஆதிக்கம் செலுத்தினார் மக்கள் திலகம். பொது வாழ்க்கையிலும் மக்கள் பணியே சிறந்தது என மக்களுக்கு தேவையானவற்றை திறம்பட செய்து வந்தார். அரசியலில் இறங்கினாலும் திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதையும் வழக்கமாக கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

அரசியலில் தீவிரம் காட்டி வந்த எம்ஜிஆர் சில திரைப்பட விழாக்களில் கலந்து கொள்ளாமல் போனாலும் அவருக்காகவே விழாவை தள்ளி வைத்த கூட்டமும் இருந்து வந்தது. ஆனால் ஏவிஎம் சரவணன் எம்ஜிஆரின் டேட் கிடைத்திருந்தாலும் ஒரு பிரபலத்திற்காக எம்ஜிஆரை ஒரு மாதகாலம் காத்திருக்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

mgr2

mgr2

பாக்யராஜ் இயக்கி நடித்த படம் முந்தானை முடிச்சு. அந்த படத்தை ஏவிஎம் சரவணன் தான் தயாரித்திருந்தார். அப்படம் மாபெரும் வெற்றி பெற்று கிட்டத்தட்ட 200 நாள்களை கடந்தும் வெற்றிகரமாக ஓடியது. இந்த நிலையில் படத்தின் 200 நாள் வெற்றி விழாவை நடத்த ஏவிஎம் சரவணன் திட்டமிட்டார். அப்போது எம்ஜிஆரிடம் அழைப்பிதழை கொடுத்து வருமாறு சொல்லிவிட்டார். எம்ஜிஆரும் சரி என்று சொல்லிவிட்டார்.

அதன் பிறகு மீண்டும் எம்ஜிஆரிடம் ஒரு மாதம் கழித்து விழாவை வைத்துக்கலாமா? கொஞ்சம் காத்திருக்க முடியுமா? என்று கேட்டாராம் சரவணன். அதற்கு எம்ஜிஆர் ஏன் என்று கேட்க எஸ்.பி.முத்துராமன் கண் சிகிச்சை செய்துள்ளார். அவர் குணமாக ஒரு மாதம் ஆகும். அவர் இல்லாமல் நான் விழாவை நடத்த மாட்டேன் என்று கூறியிருக்கிறார் சரவணன்.

mgr3

sp muthuraman

உடனே எம்ஜிஆர் படத்திற்கு யார் இயக்குனர்? என்று கேட்க பாக்யராஜ் என்று சொல்லிவிட்டு எந்த ஒரு விழாவானாலும் நான் வாழ்த்துரை எஸ்.பி.முத்துராமன் நன்றியுரை வழங்குவார். அதனால் தான் அவர் இல்லாமல் எப்படி என்று சொன்னாராம் சரவணன். அதற்கு எம்ஜிஆர் என் டேட் கிடைப்பதே பெரிசு, ஆனால் கிடைச்சும் நீ இப்படி சொல்கிறாய் என்று நகைச்சுவையாக கூறிவிட்டு சரவணன் சொன்ன தேதியிலேயே எம்ஜிஆர் கலந்து கொண்டு வாழ்த்திவிட்டு போனாராம். இதை ஏவிஎம் சரவணன் ஒரு பேட்டியில் கூறினார்.

Continue Reading

More in Cinema News

To Top