Categories: Cinema News latest news

சர்கார் கதை திருட்டு.! முருகதாஸ் வீட்டிற்கு வந்து கெஞ்சினார்.! பொது மேடையில் உளறிய பாக்கியராஜ்.!

கடந்த 2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை முன்னிட்டு விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் நடித்து வெளியான திரைப்படம் சர்கார். இந்த திரைப்படம் வெளியான போது இதுவரை இல்லாத அளவுக்கு விஜய் படத்திற்க்கு சர்ச்சைகள் எழுந்தது.

ஒரு பக்கம், ஆளும் கட்சியை விமர்சித்து படத்தில் காட்சிகள் இருப்பதாக கூறி, பிரச்சனைகள் எழுந்தது. இன்னோர் பக்கம் படத்தின் கதை என்னுடையது என ஒருவர் போர்க்கொடி தூக்கி நீதிமன்றம் வரை சென்றார்.

இது குறித்து அப்போது நடந்த பிரச்சனையை அப்போது தமிழ் சினிமா எழுத்தாளர் சங்க தலைவராக இருந்த இயக்குனர் கே.பாக்யராஜ் சமரசம் செய்து எழுத்தாளருக்கு உரிய இழப்பீடு வாங்கி கொடுத்தார்.

இதையும் படியுங்கள் – விஜய் நடித்தால் நான் நடிக்க மாட்டேன்.!அடம் பிடித்த அஜித்.! பகீர் பின்னணி.!

இது குறித்து, அண்மையில் பாக்கியராஜ் வெளிப்படையாக பல விஷயங்களை பேசியுள்ளார். அதாவது, ‘ சர்கார் பட விவகாரதில், முருகதாஸ் மற்றும் எதிர் தரப்பு இருவரும் தங்கள் கதைகளை சமர்ப்பித்து விட்டனர். இரண்டையும் ஆய்வு செய்ததில் இரண்டும் ஒன்று போல இருந்தது. புகார் கொடுத்த நபர் தான் முன்னாடியே கதையை பதிவு செய்து வைத்துள்ளார்.

இதனையடுத்து தன்னுடைய 11 பேர் கொண்ட கமிட்டியில் கேட்டு, வாக்கெடுப்பின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படும் என கூறி அனுப்பிவிட்டேன். பெரும்பாலானோர் கதை ஒன்று போல தான் இருக்கிறது என ஒப்புதல் அளித்தனர்.

அந்த சமயம் ஏ.ஆர்.முருகதாஸ் நேரடியாக என் வீட்டிற்கு வந்து இந்த கதை விவகாரத்தை சமரசம் செய்து கொள்ளலாம் என கேட்டுக்கொண்டார். ‘ அதன் பின்னர் சில முக்கியஸ்தர்கள் முன்னிலையில் சமரசம் பேசி இழப்பீடு வாங்கி கொடுத்த பிறகு நீதிமன்ற வழக்கு வாபஸ் பெறப்பட்டது. என பாக்யராஜ் குறிப்பிட்டார்.

Manikandan
Published by
Manikandan