Categories: Cinema News latest news throwback stories

ராஜீவ் காந்திக்கு சரோஜா தேவி செய்து கொடுத்த சத்தியம்!.. கடைசி வரையும் மீறல… அப்படி என்னவா இருக்கும்…

அபிநய சரஸ்வதி, கன்னடத்து பைங்கிளி என்று புகழப்பெற்றவர் சரோஜா தேவி. தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்துள்ள சரோஜா தேவி, பழம்பெரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

தமிழில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் போன்ற டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த சரோஜா தேவி, விஜய், அர்ஜூன், சூர்யா ஆகியோரின் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார். இவரது நடைக்கு என்றே பல ரசிகர்கள் இருந்தனர். அக்காலகட்டத்தில் இளம் ஆண்களின் கனகவுக்கன்னியாக வலம் வந்தவர். இவர் என்றுமே கவர்ச்சியாக உடை அணிந்து நடித்ததில்லை. ஆனால் இவர் எந்த உடை அணிந்தாலும் அதில் கவர்ச்சி இருக்கும் என கூறுவோர்கள் உண்டு.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட சரோஜா தேவி, அவர் அரசியலுக்குள் வராதது குறித்த ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது ஒரு முறை சரோஜா தேவியை டெல்லிக்கு அழைத்த ராஜீவ் காந்தி, மைசூரில் மண்டியா என்ற பகுதியில் போட்டியிட சொன்னாராம்.

ஆனால் சரோஜா தேவியோ, “நான் அரசியலுக்கு வரமாட்டேன். அரசியலில் ஒரு சாராருக்கு நல்லவராக இருக்க வேண்டும். ஒரு சாராருக்கு கெட்டவராக இருக்க வேண்டும். ஆனால் நான் ஒரு பொதுவான ஆள். எனக்கு அரசியல் வேண்டாம்” என கூறிவிட்டாராம். எனினும் ராஜீவ் காந்தி, “சரி. ஆனால் நீங்கள் வேறு எந்த கட்சிக்கும் பிரச்சாரம் செய்யக்கூடாது. எனக்கு சத்தியம் செய்துகொடுங்கள்” என கேட்டாராம். அதற்கு சரோஜா தேவியும் சத்தியம் செய்துகொடுத்தாராம். அந்த சத்தியத்தை கடைசி வரை மீறவில்லையாம்.

இதையும் படிங்க: கபாலிடா!.. இந்த பஞ்ச் டையலாக்கிற்கு பின்னாடி இருக்கும் ரகசியம்..

Arun Prasad
Published by
Arun Prasad