×

அடேங்கப்பா... இத்தனை கோடிக்கு விலைபோனதா சார்பட்டா பரம்பரை...

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
 
maxresdefault

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இதில் ஆர்யாவுடன் இணைந்து John Kokken, பசுபதி, கலையரசன், சஞ்சனா நடராஜன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

குத்து சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். அதுமட்டுமின்றி உலகப்புகழ் பெற்ற Rocky திரைப்படம் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியதோ, அந்த அளவிற்கு சார்பட்டா பரம்பரை படமும் தமிழ் சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

படப்பிடிப்பு முடிவடைந்து படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் தியேட்டர்கள் திறக்க அனுமதி இல்லை. எப்போது அனுமதி கிடைக்கும் என தெரியவில்லை.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம், நேரடியாக அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். வரும் ஜூலை 22ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகவுள்ளது. இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படம் சுமார் ரூ.32 கோடிக்கு ஓடிடியில் விலைக்கு போய்யுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். 

From around the web

Trending Videos

Tamilnadu News